இந்தியாவின் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் இவர்கள் கார் தயாரிப்பிலும் தங்களுக்கென தனி முத்திரை பதித்துள்ளனர்.
Honda Elevate facelift:
ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Honda Elevate. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள கார் Honda Elevate facelift. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இந்த கார் தற்போது அறிமுகமாகியுள்ளது.
விலை:
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.80 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16.80 லட்சம் ஆகும். தற்போது அறிமுகமாகியுள்ள இந்த காரில் மொத்தம் SV, V, VX, ZX மற்றும் ZX+ ஆகிய வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது.
SV - ரூபாய் 11.80 லட்சம்
V - ரூபாய் 12.29 லட்சம்
VX - ரூபாய் 13.93 லட்சம்
ZX - ரூபாய் 15.39 லட்சம்
ZX+ - ரூபாய் 16.80 லட்சம்
வசதிகள்:
எஸ்யூவி காரான இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது. இந்த காரின் கேபின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த காரில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க பம்பரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களும் எந்த சமரசமும் இன்றி இந்த காரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இது நடுவில் உள்ள கேமராவில் மிகவும் தெளிவாக தெரியும். காரின் வெளிப்புறத் தோற்றத்தை துல்லியமாக காண இயலும்.
சிறப்புகள்:
இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 121 எச்பி மற்றும் 145 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் வேரியண்டும் உள்ளது.
458 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 220 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், கொலிசனஜ் மில்டிகேஷன் ப்ரேக்கிங் வசதி உள்ளது. லேன் கீப் அசிஸ்டன்ஸ் வசதி உள்ளது. 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது.
ஹோண்டாவின் சிட்டி, அமேஸ், எலிவேட் ஆகிய கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் காரும் மிகப்பெரிய வரவேற்பை இந்திய சந்தையில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI