Swift 2024 Vs Tata Punch: மாருதி சுசுகி மற்றும் டாடா பஞ்ச் கார் மாடல்களில் வடிவமைப்பு மற்றும் செயல்திறன்கள் ஆகியவற்றின் ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஸ்விஃப்ட் Vs டாடா பஞ்ச்:
இந்திய சந்தையில் சிறிய SUV-க்கள் அதிகம் பிரபலமாகி வரும் நிலையில், ஹேட்ச்பேக்குகள் உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் நாட்டில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் மாடலான, ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்கள், 9 வண்ணங்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை 6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது விற்பனையில் அசத்தி வரும் டாடா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி ஆன பஞ்ச் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஆகிய இரண்டு மாடல்களில் எது சிறந்தது என்ற ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
எந்த கார் பெரியது?
புதிய ஸ்விஃப்ட்டை விட டாடா பஞ்ச் கார் மாடல் சற்று சிறியது. ஆனால் சிறிய எஸ்யூவி லெவலில் பார்க்கும்போது பஞ்ச் அகலமாகவும் நீளமாகவும் இருக்கிறது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. இந்த நான்காம் தலைமுறை காரானது, புதிய முன் முனை மற்றும் புதிய அலாய் வீல்களைப் பெற்றுள்ளது. பஞ்ச் மாடலானது வலுவான நிலைப்பாட்டுடன் ஹாரியர் போல் தெரிகிறது. இரண்டு கார்களும் வேறுபட்டவை என்பதால், ஒவ்வொருவரும் தங்களது ரசனைக்கு ஏற்ப இரண்டில் ஒரு காரை தேர்வு செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
பஞ்ச் மின்சார எடிஷனானது ஒரு பெரிய டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பஞ்ச் பெட்ரோல் ஸ்டேண்டர்டான 7 அங்குல தொடுதிரையைக் கொண்டுள்ளது. ஸ்விஃப்ட்டில் 9 இன்ச் தொடுதிரை உள்ளது. இரண்டுமேகனெக்டர் கார் தொழில்நுட்பம், பயணக் கட்டுப்பாடு, காலநிலை கட்டுப்பாடு, பின்புற கேமரா உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன. ஸ்விஃப்ட்டில் 6 ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் பஞ்ச் மாடலில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதேநேரம், பஞ்ச் மாடலில் சன்ரூஃப் வசதி கிடைக்கிறது.
இன்ஜின் விவரங்கள்:
பெட்ரோல் பஞ்ச் லிட்டருக்கு 20.10 கிமீ மைலேஜ் வழங்குகிறது. அதே நேரத்தில் ஸ்விஃப்ட் மாடல் அதிகபட்சமாக லிட்டருக்கு 25.72 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஸ்விஃப்ட் மற்றும் பஞ்ச் ஆகிய இரண்டிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள், மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் கிடைக்கிறது.
இடவசதி எப்படி?
ஸ்விஃப்ட் மற்றும் பஞ்சின் வீல்பேஸ் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் பஞ்ச் மாடல் பெரிய பூட் ஸ்பேஸுடன் அதிக காற்றோட்டமான அறையைக் கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
டாடா பஞ்ச் கார் மாடலின் விலை ரூ.7.38 லட்சம் தொடங்கி, ரூ.12.73 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 26 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதேநேரம், 5 வேரியண்ட்களில் கிடைக்கும் புதிய ஸ்விஃப்டின் விலை ரூ.6.49 லட்சம் தொடங்கி ரூ.9.64 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எந்த கார் சிறந்தது?
பஞ்ச் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய இரண்டுமே தங்களுக்கு என தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. பஞ்ச் கார் நிறைய இடவசதி மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட சிறிய எஸ்யூவியை விரும்புபவர்களுக்கானது நல்ல தேர்வாக இருக்கும். அதிக மைலேஜ் மற்றும் ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக் என்பதால், ஸ்விஃப்ட் காரானது பெரும்பாலான கார் பிரியர்களை கவர்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI