Budget EV Cars: 15 லட்சம்தான் பட்ஜெட்! அசத்தலான 6 மின்சார கார்கள் இதான்! டாடா முதல் மஹிந்திரா வரை!
ரூபாய் 15 லட்சம் வரையிலான பட்ஜெட்டிற்குள் இந்தியாவில் விற்பனையாகும் அசத்தலான கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனால், மின்சார வாகனங்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக கார் வாங்குபவர்களும் மின்சார கார்களை வாங்குவதையே விரும்புகின்றனர்.
இந்தியாவில் ரூபாய் 15 லட்சத்திற்குள் விற்பனையாகும் மின்சார கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
1. Tata Tiago EV:
டாடா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கார் Tata Tiago EV. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.39 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.52 லட்சம் ஆகும். 19.2 கிலோவாட் பொருத்தப்பட்ட பேட்டரி கொண்ட வேரியண்ட் மற்றும் 24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் கொண்ட இரண்டு கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 280 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
2. MG Comet EV:
இந்தியாவின் புகழ்பெற்ற கார்களில் ஒன்றாக இருப்பது MG Comet. இவர்களின் வெற்றிகரமான மின்சார கார் MG Comet EV. இந்த காரின் விலை ரூபாய் 8.20 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 10.69 லட்சம் ஆகும். நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்தில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதான வாகனம் இதுவாகும். இதில் 17.3 கிலோவாட் மற்றும் 17.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 170 கிலோமீட்டர் வரை இந்த கார் மைலேஜ் அளிக்கிறது.
3.Tata Punch EV:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Tata Punch. இந்த காரின் மின்சார வேரியண்ட் Tata Punch EV ஆகும். 30 கிலோவாட் மற்றும் 40 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்டில் இந்த கார் உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 10.23 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 13.34 லட்சம் ஆகும். 355 கிலோமீட்டர் மற்றும் 468 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
4.Tata Nexon EV:
டாடா நிறுவனத்தின் வெற்றிகரமான பட்ஜெட் கார்களில் ஒன்று Tata Nexon EV. இந்த காரின் மின்சார வேரியண்டே Tata Nexon EV. இதன் விலை ரூபாய் 13.40 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 18.64 லட்சம் ஆகும். 30 கிலோவாட் மற்றும் 45 கிலோவாட் பொருத்தப்பட்டது இந்த கார். ஒரே சார்ஜில் 325 கிலோமீட்டர் மற்றும் 489 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
5. Citroen eC3:
இந்தியாவில் வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று Citroen. இவர்களின் மின்சார கார் Citroen eC3. இந்த காரின் விலை ரூபாய் 13.66 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 14.34 லட்சம் ஆகும். இதில் 29 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 219 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
6. Mahindra XUV 3XO EV:
மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Mahindra XUV 3XO EV. இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 14.76 லட்சம். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 16.45 லட்சம் ஆகும். 39.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரே சார்ஜில் 285 கிலோமீட்டர் வரை இதில் செல்லலாம்.
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்





















