வாஸ்து சாஸ்திரத்தின் படி ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழ்நிலையக்கொண்டு வர வேண்டும் என்றால், உங்களது வீடுகளில் ஊசல் கடிகாரத்தை ( pendulum clock) வைத்திருப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது.


நம்மில் பெரும்பாலோனார் வீடு கட்டுவது முதல் வீடுகளில் எந்தெந்த இடங்களில் எந்தெந்தப் பொருள்களை வைத்தால் பிரச்சனை இன்றி வாழ முடியும் என்பதற்காக வாஸ்து சாஸ்திரங்களைப் பார்க்கின்றனர். அதன் படி வீடுகளை மாற்றி அமைக்கும் போது எதிர்மறை எண்ணங்கள் மறந்து நேர்மறை ஆற்றலைப் பெறுவதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அனைத்து வீடுகளில் இருக்கக்கூடிய முக்கியமானப் பொருளான கடிகாரத்தை எங்கு வைப்பது? எந்த மாதிரியான கடிகாரங்களை வீடுகளில் பயன்படுத்தலாம் என அறிந்துகொள்வோம்.



வாஸ்து முறைப்படி, ஒவ்வொரு பொருள்கள் வைப்பதற்கும் ஒவ்வொரு இடம் முக்கியமானது என கூறப்படும் நிலையில், நம்முடைய நேரத்தைக் கணக்கிட உதவும் கடிகாரத்தை வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசைகளில் மாற்றி வைக்கலாம். இதன் மூலம் நேர்மறை எண்ணங்களை மட்டும் நம்முடைய வாழ்வில் கொண்டு வர முடியும். மேலும்  வடக்கு திசையில் செல்வம் மற்றும் செழிப்பைத் தரும் குபேரன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே வடக்கு திசையில் சுவர் கடிகாரத்தை வைக்கும் போது பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு கிடைக்கிறது. இதேபோன்று கிழக்கு திசையில் லட்சுமி போன்ற  தெய்வங்கள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது.


எனவே கிழக்கு திசையிலும் சுவர் கடிகாரங்களை வைத்துக்கொள்ளலாம். மேலும் வடகிழக்கு திசையில் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த திசையிலும் சுவர் கடிகாரங்களை வைக்கும் போது சிறந்த பலன்களை நாம் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.


மேலும் வாஸ்து சாஸ்திரத்தில், ஆரோக்கியமான சூழலை உங்கள் வீடுகளில் கொண்டுவருவதற்கு ஊசல் கடிகாரம் (pendulum clock)  வைத்தால் நன்மை தரும். இதன் அமைப்பு மற்றும் மெல்லிய மணியோசையைக் கேட்கும் போது உங்களது மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.


நேரத்தை சரியாகக்காட்டுவதற்கும், வாழ்க்கையில் பிரச்சனையின்றி வாழ்வதற்கும் உதவியாக உள்ளது.  இதோடு வட்டம், சதுரம் அல்லது எட்டு மற்றும் ஆறு கைகள் கொண்ட கடிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். 



இதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே இனி மேல் உங்களது வீட்டிற்குக் கடிகாரம் வாங்குகிறீர்கள் என்றால் இதுபோன்றவற்றை நினைவில் வைத்து வாங்க முயலுங்கள் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதோடு நீங்கள் கடிகாரம் வாங்குகிறீர்கள் என்றால் சிவப்பு, கருப்பு அல்லது நீல நிறக்கடிகாரத்தை வாங்காமல், அதற்குப்பதிலாக மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிறக் கடிகாரத்தை வாங்கலாம். இது உங்களது வாழ்க்கையில் நமக்கு பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.