தமிழ்நாடு தற்போது சட்டமன்ற தேர்தலை நோக்கி பரபரப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருப்பவர் நடிகர் விஜய்.
விஜய்யின் ஜாதகம் என்ன சொல்லுது?
விஜய்யின் பிறந்த தேதி 22.06.1974 ஒருவரின் ஜாதகத்தில் இயல்பாகவே எந்த நிறம் அவருக்கு உகந்ததாக இருக்கும், எந்த நிறம் அவருக்கு எதிர்மறையான ஆற்றல்களை கொண்டு வரும் என்பதை கணிக்க முடியும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விஜயின் ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்கிறது.
கடகம் என்றாலே வெள்ளை நிறம், பரந்த கடல், தாய் உள்ளம், அள்ளிக் கொடுக்கும் உதாரண குணம், அனைவரையும் அரவணைக்கும் அன்பு, கலைத்துறை, உணவு.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
விஜயின் ஜாதகத்திற்கு ஏற்ற நிறங்கள் எது?
திமுக கொடியில் கருப்பு சிவப்பு இரண்டு நிறங்கள் உள்ளன. இவை இரண்டுமே விஜயின் ஜாதகத்தில் உள்ள செவ்வாய்க்கு ஆகாது. செவ்வாய் என்றாலே சிவப்பு. வலிமை இழந்த செவ்வாய் கொண்டிருக்கும் விஜய்க்கு சிவப்பு ஆகாது. அதேபோல விஜய் லக்னத்திற்கு ஆறாம் வீட்டு அதிபதியாக சனி வருகிறார்.
கருப்பு நிறம் இப்படியான சூழ்நிலையில் திமுக வைத்திருக்கும் கொடியின் நிறத்திற்கு எதிராக விஜயின் அமைப்பு இருப்பதால் நிச்சயமாக திமுகவை எதிர்த்தால் விஜய்க்கு வெற்றி உண்டு என்பதை ஜாதக ரீதியாக கணிக்க முடிகிறது.
அதிமுக கொடியில் இருக்கும் வெள்ளை நிறம்..!
அப்படி என்றால் அதிமுகவிலும் சிவப்பு கருப்பு நிறம் உள்ளது என்று நீங்கள் யோசிக்கலாம். முக்கியமாக "வெள்ளை நிறம்" சிவப்புக்கும் கருப்புக்கும் நடுவில் உள்ளதை கவனித்திருப்போம், அந்த வெள்ளை நிறம் தான் சந்திரனின் வீடான கடகத்தை குறிக்கும்.
இப்படியாக வெள்ளை நிறத்தின் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் விஜய்க்கு அதிமுக கொடியில் இருக்கும் வெள்ளை உதவி செய்யும் என்று கூறலாம். குறிப்பாக அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை நிறத்தில் அமைந்திருக்கிறது.
புதன் விஜய்யின் ஜாதகத்தில் வலிமையாக இருக்கிறார். அந்த புதனின் நிறம் பச்சை. வலிமையாக இருக்கும் நிறம் பச்சை விஜய்க்கு உதவி செய்யும் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது... இவை வைத்து மட்டுமே ஒருவரின் வெற்றியை தீர்மானம் செய்ய முடியுமா என்றால் 70% தீர்மானம் செய்ய முடியும்.
ஆனால், விஜய் வைத்து மட்டுமே கட்சி அல்ல அவருடைய தொண்டர்களையும் நிர்வாகிகளையும் வைத்து கட்சி நகரும். எதிர்காலத்தில் யார் யாருடன் கூட்டணி என்பதை அந்த கட்சி தீர்மானிக்கும். ஆனால், ஜாதக ரீதியாக விஜயின் அமைப்புக்கு ஏற்ற நிறங்கள் அவருக்கு சாதகமாகும். அவருடைய அமைப்புக்கு எதிர்ப்பாக இருக்கும் நிறங்கள் பாதகமாகவும் செயல்படும் என்பதை நிச்சயமாக கணிக்க முடியும்.
திமுகவை எதிர்த்தால் விஜய் ஜெயிப்பாரா?
நிச்சயமாக அவருக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. குறிப்பாக அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால் மக்களின் ஆதரவு அவருக்கு உண்டு என்பதை கடகத்தில் இருக்கும் செவ்வாய் மூலம் நம்மால் உணர முடியும்.
உதாரணத்திற்கு சீமானின் ஜாதகத்தில் சூரியன் துலாத்திலிருந்து அரசை எதிர்த்தால் ஆதரவு உண்டு என்ற நிலைப்பாட்டில் இளைஞர்களின் ஆதரவோடு சீமான் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்தால் இளைஞர்களின் ஆதரவு உண்டு என்ற அடிப்படையில் விஜய்க்கும் மக்களின் ஆதரவு ஏற்படும்.