தேதி            - ஜூன் 10ம் தேதி


கிழமை      – திங்கள்கிழமை


நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


                          மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கெளரி நல்ல நேரம் :


                           மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


                           இரவு     7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு:


                         காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


 குளிகை :


                          மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


                     காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


சூலம்           - கிழக்கு


 


மேஷம்:


மேஷ ராசியினர் இந்த நாளில் கூடுதல் கவனமாக இருக்க  வேண்டும். ஞாபக மறதி ஏற்படும். முக்கிய நிகழ்வுகளை மறக்கக்கூடும். இதனால், எந்தவொரு செயலையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அலுவலகத்தில் பணிகளில் கவனமாக செயல்படுங்கள்.


ரிஷபம்:


ரிஷப ராசியினருக்கு இந்த நாள் நல்ல ஓய்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக பணிசுமையை அனுபவித்து வந்த உங்களுக்கு இந்த நாள் சற்று மாறுதலாக இருக்கும். கோயிலுக்கு சென்று மன அமைதி காண்பீர்கள். கணவன் – மனைவி மனம் விட்டு பேசுவீர்கள்.


மிதுனம்:


மிதுன ராசியினருக்கு இந்த நாள் அவர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஆசை நிறைவேறும் நாள். வரன்கள் வாயில் வந்து சேரும் நாள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். தெய்வீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சோர்வுகள் மறையும் நாள்.


கடகம்


மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். உடல் நிலையில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கியமான செயல்பாடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.


சிம்மம்


கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த எண்ணங்கள் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். களிப்பு நிறைந்த நாள்.


கன்னி


சுப காரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் நவீனத்துவத்தை கையாளுவீர்கள். அரசு வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருவாய்கள் தேவைக்கு இருக்கும். தனம் நிறைந்த நாள். 


துலாம்


முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். துணைவர் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். பரிவு வேண்டிய நாள்.


விருச்சிகம்:


எதிலும் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் சில அலைச்சல்கள் ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள். 


தனுசு


விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் மறையும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுதந்திரமாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.


மகரம்


வெளியூரில் உள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பயணங்களால் உடலில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பகை விலகும் நாள்.


கும்பம்


சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். கலைப் பொருட்களை வாங்குவீர்கள். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். இறை பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் சாதகமாக அமையும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


மீனம்


இனம்புரியாத சில சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தோல்விகள் விலகும் நாள்.