தமிழ் மாதத்தின் முதல் மாதம் சித்திரை. நாளை மறுநாள்( 14-ஆம் தேதி-வெள்ளிக்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது.


அறிவியல் ரீதியாக சூரியன் பூமியை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது. இதை வைத்து தான் தமிழ் வருடத்தின் கால அளவும் பின்பற்றப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் நுழைவதை தமிழ் வருடத்தின் தொடக்க ஆண்டு என்றும், மீன ராசியிலிருந்து வெளிவருவதை இறுதி ஆண்டு என வைத்து தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுகிறது. சோபகிருந்து புத்தாண்டில் ராசிபலன் குறித்த முழு பலன்களை பிரபல ஜோதிடர் கஜகேசரி டாக்டர் ஆச்சார்ய ஹரேஷ்ராமன் கணித்துள்ளார். 


கன்னி ராசிக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.


கன்னி ராசி அன்பர்களே..!


சோபகிருது ஆண்டு நல்ல நன்மைகள் நடக்க உள்ளன. கன்னி ராசிக்கரர்களுக்கு வெற்றிகள் கிட்டும். புதிய வேலைவாய்ப்புகள் கிட்டும்.


குரு-ராகு சஞ்சாரம் ஏற்படுவதால் தலை சம்பந்தப்பட்ட பகுதிகளில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரியோர்களின் உடல்நலனை கவனமுடன் பார்த்துகொள்ள வேண்டும்.


திடீர் பண வரவு ஏற்படும். உங்களுக்கு எதிரான காரியங்கள் கூட சாதகமாக மாறிவிட்டும் வாய்ப்புகள் உள்ளது. விபரீத ராஜயோகம் உண்டு என்லாம். எதிர்பாராத வெற்றி உறுதி.
 புதிய வீடு வாங்கும் பாக்கியம் உண்டாகும். இறந்தவர்களின் வீடு வாங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 


நெருடலான சூழ்நிலைகள் இருந்தாலும், குழப்பம் இருக்கும். அண்ணன் -தம்பி இடையே பிரச்சனைகள் நிகழும்.


பொருளாதாரத்தில் பத்து மடங்கு வளர்ச்சி உண்டு. ஏழாம் இடத்தில் ராகு வரும்போது, வாழ்க்கை துணைக்கு வெளிநாடு போகும் யோகம் கிட்டும். எண்ணங்கள் தடை ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.


கன்னி ராசிக்காரர்களுக்கு பிடிவாதம் அதிகமாகும். சந்தேகங்கள் எழும். ஆனால், அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல எண்ணத்துடன் இருப்பதற்கு முயற்சி செய்யவும். வேலையில் நிலைத்தன்மை உள்ளது. வீடு கட்டக்கூடிய பிராப்தம் உள்ளது. கடன் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. ஜாமீன் கையெழுத்துபோடும்போது எச்சரிக்கையாக இருங்கள். அக்டோபர் மாதத்துக்குப் பிறகு நீங்கள் முன்னேறும் வாய்ப்புகள் உண்டு.


பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் எல்லாம் கைகூடும். தேங்காய் உடைத்து பூஜை செய்யவும்.


இது விபரீத காலகட்டம், முடிந்தளவிற்கு பொறுமையுடன், கவனமாக இருக்க வேண்டும். நல்ல மாற்றங்கள் நடந்தேறும். அஸ்ட மற்றும் சித்திரை நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இந்தப் புத்தாண்டு சிறப்பாக அமையும். மகான்களிம் தரிசனத்தைக் கொடுக்கும். மாற்றங்கள் நிகழும்.


உத்திரம் நட்சத்திரகாரர்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.


தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி?
 
1)முத்தமிழை குறிக்கும் முக்கனிகள் (மா, பலா, வாழை : வாழை எப்போதும் கிடைக்கும், ஆனால், மா, பலா ஆகியவை சித்திரை மாதம் மட்டுமே கிடைக்கும். அதனால் தான் தமிழர்கள் சித்திரையை புத்தாண்டாக கொண்டுள்ளனர்)
2)வெற்றிலை, பாக்கு
3)பூ
4)தேங்காய்
5)பணம் (ரூபாய் நோட்டு/காசு)
6)நகை (தங்கம்/வெள்ளி)
7)விளக்கு தீபம்
8)மஞ்சள்,குங்குமம்
9)கிண்ணத்தில் சிறிது அரிசி,பருப்பு
இந்த ஒன்பது பொருட்களையும் ஒரு கண்ணாடியின் முன் வைத்து , அந்த பிரதிபலிப்பை பார்த்தால் ஆண்டு முழுவதும் வளம் பெருகும் என்பது தமிழரின் தொன்றுதொட்ட நம்பிக்கை.