சிவனுக்கு உகந்த நாளாக திங்கள் கிழமை உள்ளது. சிவன் பக்தர்கள் திங்கள் கிழமை அன்று விரதம் இருப்பதை கடைபிடித்து வருகின்றனர். ‘சவான் கா சோம்வர்' என்ற நோன்பை ஒரு மாதம்  கடைபிடிக்கின்றனர். இந்த நோன்பு ஜூலை 25ஆம் தேதி தொடங்கியது. இந்த மாதத்தில் திங்கள் கிழமை விரதமும் இருந்து நோன்பை கடைபிடிப்பது, மிகவும், விஷேசகமாகவும், புனிதமாகவும், கருதப்படுகிறது. ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரை இந்த நோன்பு இந்த வருடம் அனுசரிக்கப்படுகிறது.


 


இந்த நோன்பு நேரத்தில் விதவிதமான உணவுகள் சமைத்து சிவனுக்கு  படைப்படுகிறது. விரத முறைகளின் போது எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். உணவுகள் மற்றும் சில ரெசிபிக்களை தெரிந்து கொள்வோம்.


                                 


குட்டு கி பூரி


இது இந்த சவான் மாதங்களில் மிகவும் பிரபலமானது. இதை தயாரிக்க கோதுமை மாவு, வேகவைத்த உருளை கிழங்கு, உப்பு, மிளகு தூள், எண்ணெய் ஆகியவை தேவைப்படும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, போட்டு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு , உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, நன்றாக கொதி நிலைக்கு வரும் வரை வைத்து கொள்ளவும். பிசைந்து வாய்த்த மாவு, சிறிய உருண்டைகளாக உருட்டி அதை,  தேய்த்து, எண்ணையில் போட்டு எடுக்கவும்.




சபுதானா டிக்கி 


 இந்த சவாண் மாதங்களில் உருளை கிழங்கு மிகவும் பிரபலமாக எடுத்து கொள்ளும் உணவு. நோன்பு கடை பிடிப்பவர்கள் அதிகம் விரும்பி எடுத்து கொள்வார்கள். உருளை கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். வேகவைத்த உருளை கிழங்கை நன்றாக பிசைந்து அதனுடன், மாங்காய் தூள், உப்பு, பச்சைமிளகாய், சீரகத்தூள், என அனைத்தையும் சேர்த்து மேலும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணையில் போட்டு பொன்னிறமாக வருது எடுக்கவும்




பேரிச்சம் பழம் மற்றும் உளர் பழங்கள் லட்டு - வாடா மாநிலங்களில் எந்த ஒரு உணவும் இனிப்பு அதிலும் குறிப்பாக லட்டு இல்லாமல் இருக்காது. அவர்களுக்கு என்று இந்த லட்டு ரெசிபி. ஒரு கடாயில், நெய் ஊற்றி, அதில், பேரீச்சம் பழங்களை லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். அதே கடாயில், உளர் பழங்களை போட்டு வறுத்து எடுத்து வைத்து ஒன்றாக கலந்து கொள்ளவும். அதே சூட்டில் சிறிய சிறிய லட்டுகளை தயாரிக்கலாம். மிகவும் சுவையாகவும் ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.




வட மாநிலங்களில் மிகவும், பிரபலமான இந்த சவாண் மாதம், அணைத்து ஊர்களில் இருக்கும் சிவன் தெய்வத்தை வழிபாடுபவர்களால் அனுசரிக்க படுகிறது. மிகவும் புனிதமான இந்த மாதத்தில் சிவன் பக்தர்கள் நோன்பு இருந்து மனமுருகி வழிபடுகின்றனர்.