ஜோதிடத்தின் ஒன்பது கிரகங்களில்  முதன்மையானதாக கருதப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அதேசமயம் ஆண்டுக்கு ஒருமுறை வக்கிரம் அடைகிறார்.  அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் வரை இந்த வக்ரகாலம் நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை காணலாம். 



  • மேஷம் ராசிக்காரர்களே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் அதிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவும். அவசரப்பட்டு வேலையை விடுவது, வேறு வேலைக்கு முயற்சி செய்வது கூடாது. கவனமாக  சிந்தித்து செயல்படுங்கள்.  சுபகாரியங்கள்  தடை ஏற்பட்டு பின் இனிதே நடக்கும். குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள்,பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும் தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

  • ரிஷபம் ராசிக்காரர்களே, சனிபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சஞ்சரிப்பது தொழில் ஸ்தானமாகும். இது கரும ஸ்தானம் என்பதால் வேலையில் நெருக்கடி நிலை ஏற்படலாம்.  நல்ல கல்வி உயர்கல்வி அமைய வாய்ப்புகள் அமையும். மேலும் தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதேசமயம் ஒரு திருப்தியற்ற சூழ்நிலை வேலையில் நிலவும். மனை, வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் தேடி வரும்.

  • மிதுன ராசிக்காரர்களே, சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் நிலையில் பாக்ய சனியால் எந்த தடையுமின்றி செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத நிலையில் உயர் அதிகாரிகளுடனான உறவு சுமூகமாக இருக்காது. புதிய வேலை கிடைப்பதில் தடைகளும் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அலைச்சல்களும் நிம்மதியற்ற சூழ்நிலையும் ஏற்படும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  

  • கடகம் ராசிக்காரர்களே, உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கும் நிலையில், தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும். கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.  எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமாக வந்து சேரும்.  உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசனை செய்ய வேண்டும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.  குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

  • சிம்மம் ராசிக்காரர்களே, சனிபகவான் கண்டச்சனியாக மாறி உங்களை கவலைக்குள்ளாக்கி வருகிறார். நவம்பர் மாதம் வரைக்கும் வக்ர நிலையில் பின்னோக்கி நகர்வதால் சில நன்மைகள் உண்டாகலாம். இந்த கால கட்டத்தில் மனதையும் உடலையும் மகிழ்வாக  வைத்துக் கொள்ளுங்கள்.  செலவுகளைக் குறைத்து முதலில் சேமிக்கத் தொடங்குங்கள்.  ஒரு சிலருக்கு வீடு, மனை,  வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.  பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 

  • கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் உள்ள சனியால் அபரிமிதான யோகங்களை பெறுகிறீர்கள். அதேசமயம் சனியின் வக்ர சஞ்சாரத்தினால் அலைச்சல்கள் அதிகரித்து தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும். மேலும் சகோதர சகோதரிகளால் தேவையற்ற மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.  இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகலாம். சூழ்நிலையால் நாணயம் தவறி நடக்கும் சூழ்நிலை அமையும். எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு கிடைக்கும். நவம்பர் மாதம் வரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் அவசியம்.

  • துலாம் ராசிக்காரர்களே சனி பகவான் வக்ர நிலையில் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இதனால் பண வருமானம் அதிகமாக இருக்கும். மேலும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வீடு, மனை,வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும்.  உறவினர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். மூத்த சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும் சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.

  • விருச்சிக ராசிக்காரர்களே சனிபகவான் தற்போது உங்களுடைய ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார். எனவே புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும்.  புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், அதில் லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு  லாபம் அதிகரிக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். நவம்பர் மாதத்திற்கு மேல் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காதீர்கள் 

  • தனுசு ராசிக்காரர்களே, சனி பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் ஏழரை சனி காலம் முடிந்த நிலையில் சனி பகவான் மீண்டும் வக்ர நிலையில் பயணம் செய்வதால் தயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மாணவர்களில் சிலருக்கு உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். மேலும் விரயச் செலவுகள் அடிக்கடி ஏற்படும் .சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைய திருநள்ளாறு நள தீர்த்தக்குளத்தில் நீராடி சனிபகவானை வணங்கலாம்.
     

  • மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனி பகவான் தற்போது இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். ஆகவே ஏழரை சனியில் பாத சனி நடந்தாலும்,சனி பகவான்  தன ஸ்தானத்தில் பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத பணம்,  பொருள் வரவு  கிடைக்கும்  கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். தீபாவளிக்குப் பிறகு சுப காரியங்கள்  நடக்கும் சூழல் அமையும்.  பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மேலும் குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு அதிகரிக்கலாம். வார்த்தைகளில் கவனமும் நிதானமும் அவசியம்.


  • கும்பம் ராசிக்காரர்களே, உங்களுடைய ராசிநாதனான சனி பகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் வரைக்கும் வக்ர சனியால் பின்னோக்கி பயணம் செய்யும் சனிபகவானால் தள்ளிப் போன சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும். மேலும் வேலை விஷயமாக வெளி இடங்களுக்கு செல்வதற்கு  வாய்ப்புகள் தேடி அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் கிட்டும்.  வீடு வாங்கும் யோகம் தேடி வரும். கடன் பிரச்சினை இருந்தாலும் பணம் வரவும் இருக்கும். திருமணம் கைகூடி வரும்.   யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.


  • மீனம் ராசிக்காரர்களே, சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்து வக்ர நிலையில் பயணம் செய்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு,   வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமாகவே அமையும். கேட்ட கடன் கிடைக்கும்.  வேலையின் நிமித்தம் வேலைக்காக வெளி இடங்களுக்கு செல்லும் சூழல் அமையும். விரைய சனி காலம் என்பதால் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு தேய்பிறை மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.