கோயில்களில் செலுத்தப்படும் காணிக்கை விபரம், சமீபமாக ஆச்சர்யம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்பாக கோயில்களுக்கு வருவோரும், காணிக்கை செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. காணிக்கை செலுத்துவோர் எண்ணிக்கையை விட, அதிக காணிக்கை செலுத்துவோர், காஸ்ட்லி காணிக்கை செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி காணிக்கை கிடைத்துள்ளது.
அப்போது கடந்த 7 நாட்களில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. 96 லட்சத்து 58 ஆயிரத்து 770 ரொக்கமும்,3 கிலோ 157 கிராம் தங்கமும், 2 கிலோ 952 கிராம் வெள்ளியும், 98 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார். வெறும் 7 நாட்களில் மட்டும் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் வெள்ளி காணிக்கை கிடைத்திருக்கும் நிலையில், இன்னும் சமயபுரம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் உள்ளது.
கடந்த சில நாட்களாக சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடந்த விசேஷ விழாவில் பங்கேற்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்த நிலையில், உண்டியல்கள் விரைவில் நிரம்பின. இதைத் தொடர்ந்து தான். உண்டியல் காணிக்கைகளை எண்ண கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் படி வழக்கம் போல சமூக ஆர்வலர்கள் மற்றும் இறைத் தொண்டர்களை கொண்டு உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெற்றது. அதில் எதிர்பார்த்ததைப் போல அதிக தொகையும், நகையும் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்