Rasipalan (24-02-2025): துலாம் ராசிக்கு நன்மை; மிதுனத்திற்கு வெற்றி - உங்க ராசிக்கு எப்படி?

Rasi Palan Today (24-02-2025): இன்று மாசி மாதம் 12 ஆம் நாள், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

Continues below advertisement

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today Februray 24, 2025: 

அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...

Continues below advertisement

மேஷம்

சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சாஸ்திர சடங்குகளை பற்றிய புரிதல் பிறக்கும். தொழில் வகையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தர்ம காரியத்தில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பங்காளி வகையில் ஏற்பட்ட வேறுபாடுகள் மறையும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் சாதகமற்ற சூழல் அமையும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். எதிர்பார்த்த முடிவுகளில் சில மாற்றம் உண்டாகும். சஞ்சலம் நிறைந்த நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உள்ளத்தில் அமைதி ஏற்படும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உயர்வான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

வெளிவட்டார பழக்கம் விரிவடையும். மனதில் உற்சாகம் பிறக்கும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளால் திடீர் யோகம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். வியாபாரம் சார்ந்து திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆசை மேம்படும் நாள்.

சிம்மம்

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். விரயம் நிறைந்த நாள்.

கன்னி

பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

துலாம்

விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். குறுகிய தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். செலவிற்கேற்ற வரவுகள் உண்டாகும். சகோதர வழியில் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் தொடர்பும் ஏற்படும். சிந்தனைபோக்கில் கவனம் வேண்டும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பேச்சு வன்மை மூலம் லாபங்களை அடைவீர்கள். பொன் பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

தனுசு

நீண்ட நாள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முடியாத சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். விற்பனைத் துறையில் பொறுமையை கையாளவும். வரவு நிறைந்த நாள்.

மகரம்

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபம் நிறைந்த நாள்.

கும்பம்

வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடன் இருப்பவர்கள் உதவியால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதிய குறிக்கோள்கள் பிறக்கும். வேளாண் பணியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். ஆதரவு நிறைந்த நாள்.

மீனம்

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கோவில் நலப்பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். உடை அலங்காரத்தில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். வேலையாட்களுடன் அனுசரித்துச் செல்லவும். போட்டிகள் நிறைந்த நாள்.


 

Continues below advertisement