இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today January 09 2025:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி நிமித்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் வருகை மூலம் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். அரசு காரியத்தில் அலைச்சல் மேம்படும். பணிமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். கால்நடைகள் செயல்களில் பொறுமை வேண்டும். வரவு நிறைந்த நாள்.
மிதுன ராசி
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
கடக ராசி
விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்ம ராசி
வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப நபர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கவலை விலகும் நாள்.
கன்னி ராசி
எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் நயமான பேச்சுக்கள் உங்களின் நன்மதிப்பை உருவாக்கும். நம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம் ராசி
உத்தியோக பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகளும், சுபவிரயங்களும் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பக்தி நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பழைய பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை உருவாக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு ராசி
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுப்பூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். சாந்தம் வேண்டிய நாள்.
மகர ராசி
உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகள் மூலம் உயர்வுகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான விசயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவுகள் ஏற்படும். அனுபவம் மேம்படும் நாள்.
கும்ப ராசி
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
மீன ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் காணப்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல்கள் அமையும். தொல்லை விலகும் நாள்.