நாள்: 06.05.2023 - சனிக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 


சூலம் - கிழக்கு


மேஷம்


வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். தந்தைவழி தொழிலால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


ரிஷபம்


பயணங்கள் செல்வது தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் ஏற்படும். தேவையற்ற கருத்துகள் கூறுவதை குறைத்து கொள்வது நல்லது. எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். செய்கின்ற பணிகளில் திடீர் திருப்பமும், எதிர்பாராத பண வரவும் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.


மிதுனம்


உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பழைய நினைவுகளால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.


கடகம்


தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றங்கள் ஏற்படும். உயர்வு உண்டாகும் நாள்.


சிம்மம்


விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த திறமைகள் வெளிப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


கன்னி


எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாக்கு சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வரவுகள் நிறைந்த நாள்.


துலாம்


வழக்கு தொடர்பான பணிகளில் திடீர் திருப்பம் உண்டாகும். புதிய முயற்சியில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். எந்த செயலையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும். வெற்றி நிறைந்த நாள்.


விருச்சிகம்


குடும்ப உறுப்பினர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதிய நம்பிக்கை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சுதந்திரத்தன்மை வெளிப்படும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


தனுசு


இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு உயர்கல்வி நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நட்புகள் கிடைக்கும் நாள்.


மகரம்


வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் சாதகமாக அமையும். பயணங்கள் சார்ந்த தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். திருப்பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் சில விரயங்கள் ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். பெருமை நிறைந்த நாள்.


கும்பம்


உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.


மீனம்


மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். எந்தவொரு செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். சமூக பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.