நாள்: 03.08.2022


நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


மதியம் 12.15 மணி முதல் மதியம் 01.15 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


குளிகை :


காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவமும், ஆதாயமும் உண்டாகும். வியாபார பணிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் முன்னேற்றத்தினை உருவாக்குவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். 


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, நெருக்கமானவர்களிடத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். கலைநயம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். 


கடகம் :


கடக ராசி நேயர்களே, தொழில் சம்பந்தமான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தாயின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் மாற்றம் உண்டாகும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஆதரவு புதிய நம்பிக்கையை உருவாக்கும். 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவுபெறும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வணிகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். 


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, விவசாயம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படுவது நல்லது. சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண