29.08.2022


திங்கள்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை


மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று  சுமாரான செயல்களே நடைபெறும் சூழ்நிலை காணப்படும். உங்களுக்கு சாதகமான பலன்கள் காண நீங்கள் திட்டமிட்டு முயற்சி செய்ய வேண்டும். இதனால் சூழ்நிலை சீர்பெறும். உங்கள் பணியில் நன்மையான பலன்கள் காண கடினமாக போராட வேண்டும். என்றாலும் இறுதியில் வெற்றி நிச்சயம்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் பொறுமையான அணுகுமுறை தேவை. திட்டமின்றி செயலாற்றினால் இழப்புகள் ஏற்படலாம். உறுதியான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். நிதி வளர்ச்சி சுமூகமாக இருக்காது. உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது கூட கடினமாக உணர்வீர்கள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று உங்கள் நேர்மறை அணுகுமுறை மூலம் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் தைரியம் மற்றும் உறுதி காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். உங்கள் செயல்திறனில் உங்கள் திறமை வெளிப்படும். உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,  உங்களுக்கு சாதகமான நாள். இன்று புதிய மனிதர்களை சந்தித்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்ப்புள்ளது. உங்களுக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணியில் உற்சாகம் காட்டி வெற்றி பெறுவீர்கள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தேவை. கோவிலுக்கு செல்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற திட்டமிட வேண்டும். உங்கள் நன்மதிப்பிற்கு பங்கம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறிது விழிப்புடன் இருக்கவும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். இன்று பணியில் காணப்படும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று சில தடைகளை சந்திப்பீர்கள். பொறுமையாக உங்கள் செயல்களைக் கையாளுங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். பாதுகாப்பின்மை உணர்வு கொள்ளாதீர்கள். இன்று அதிகப் பணிகள் காணப்படும். இன்று பணியில் காணப்படும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று வெற்றி காண்பதற்கு சாதகமான நாள். உங்கள் ஆர்வத்தை பெருக்கும் புதிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். உங்கள் பணியில் திருப்தி காணப்படும். உங்கள் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று  துடிப்பான நாளாக இருக்காது. எதிர்மறை விளைவுகளை தடுக்க பொறுமை மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. சிறப்பாக செயலாற்றுவதை கடினமாக உணர்வீர்கள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காண இன்று முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும். பணியிடச் சூழல் சிறப்பாக செயலாற்றுவதற்கு சாதகமாக இருக்காது. உங்கள் கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்சினை ஏற்படலாம்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்று பக்குவமாகவும் புத்திசாலித்தனத்துடனும் சூழ்நிலையைக் கையாள வேண்டும். இந்தப் போக்கு இன்றைய வேறுபாடுகளையும். அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் மிதமான பலன்களே கிடைக்கும். பணிச்சுமை உங்களுக்கு கவலையை அளிக்கும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் பயனளிக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியை விரும்பி மேற்கொள்வீர்கள். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியாக உங்கள் பணிகளை மேற்கொள்வீர்கள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சிகரமான வாய்ப்பு காணப்படும். மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். என்றாலும் முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள் அல்ல. உங்கள் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மூலம் சிறப்பாக செயலாற்றுவீர்கள்.