நாள்: 25.03.2023 - சனிக்கிழமை


நல்ல நேரம் :


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை




இராகு :



காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மற்றவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புரிதல் நிறைந்த நாள்.


ரிஷபம்


செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வரவுகள் நிறைந்த நாள்.


மிதுனம்


புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.


கடகம்


எதிர்பார்த்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.


சிம்மம்


வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உதவிகள் கிடைக்கும் நாள்.


கன்னி


குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அலைச்சல்கள் ஏற்படும். முக்கியமான வேலைகளுக்கு மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.


துலாம்


போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வெளிப்படையான குணநலத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பழக்கவழக்கத்தின் மூலம் ஆதாயத்தை உருவாக்கி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். பக்தி நிறைந்த நாள்.


விருச்சிகம்


பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் வாய்ப்புகளின் மூலம் புதுமையான சூழல் அமையும். சுகம் நிறைந்த நாள்.


தனுசு


பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். ரசனையில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். கலைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


மகரம்


உயர்நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றங்கள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.


கும்பம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செய்கின்ற செயல்பாடுகளில் திருப்தியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


மீனம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு அலைச்சலுக்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.