RasiPalan Today August 24: 


நாள்: 24.08.2023 - வியாழன்கிழமை


நல்ல நேரம் :


நண்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


இராகு :


மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


குளிகை :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


வியாபாரம் நிமிர்த்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


ரிஷபம்


சிந்தனைகளில் புதுமை பிறக்கும். அதிகாரப் பொறுப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மதிப்பு மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். தந்தை வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.


மிதுனம்


கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு பிறக்கும். கால்நடைகளின் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.


கடகம்


வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.


சிம்மம்


உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். செலவுகள் நிறைந்த நாள்.


கன்னி


மனதளவில் சிறு சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.  தற்பெருமை பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சேமிப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சபை பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருக்கவும். மேன்மை நிறைந்த நாள்.


துலாம்


விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு உண்டாகும்.  வாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும். உதவிகள் கிடைக்கும் நாள்.


தனுசு


சகோதரர் வகையில் அனுசரித்துச் செல்லவும். அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவர்வீர்கள். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.


மகரம்


செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மை உண்டாகும். மனதில் புதிய தேடல் பிறக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உறுதி நிறைந்த நாள்.


கும்பம்


அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிச் சுமையினால் கோபம் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். சாலைப் பயணங்களில் கவனம் வேண்டும். பக்தி நிறைந்த நாள்.


மீனம்


எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும். தடைகள் நிறைந்த நாள்.