நாள்: 24.09.2022


நல்ல நேரம் :


காலை 7.45 மணி  முதல் 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை


மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


சூலம் –கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. என்றாலும் அமைதியாக சகஜமாக இருங்கள். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் சுமாராக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்காக செலவுகள் செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். இதனால் அமைதி இழந்து காணப்படுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமைய இந்த உணர்வை தவிர்க்க வேண்டும். இன்று பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் வெற்றி காணலாம்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியான பலன்கள் கிடைக்கும் அற்புதமான நாள். இன்று மறக்கமுடியாத தருணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்வீர்கள். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். எதிர்கால பொருளாதார பாதுகாப்பிற்காக போதிய அளவில் பணம் சேமிப்பீர்கள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரார்த்தனை உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். பணியிடத்தில் சவால்கள் காணப்படும். சிறப்புடன் பணியாற்ற கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று யதாரத்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும். இன்று சுமாரான பலன்களே காணப்படும். உங்கள் பணிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் பணிகளை திறமையுடன் முடிக்க சிறப்பாக திட்டமிட வேண்டும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,  இன்றைய நாள் உற்சாகமாக காணப்படும். எந்த எதிபார்ப்புமின்றி செய்யும் காரியங்கள் இன்று வெற்றியைத் தரும். பணியிடத்தில் இனிமையான சூழல் காணப்படாது.பணிச்சுமைகளும் அசௌகரியமும் கவலையை அளிக்கும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் இன்று அதிக முயற்சியின்றி உங்கள் பணிகளை ஆற்ற முடியும். இன்றைய சாதகமான பலன்களை அனுபவித்து மகிழுங்கள்.இன்று நிதி வளர்ச்சி ஸ்திரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு காணப்படும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரைவாக செயலாற்றி உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். உங்களின் பரந்த நோக்கம் மற்றும் திறந்தமனம் வெற்றியை பெற்றுத் தரும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். குறித்த நேரத்திற்கு முன்பே உங்கள் பணிகளை முடிப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.


 தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. உங்கள் செயல்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படாமல் திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் சக பணியாளர்களால் பணியில் சில இடையூறுகள் ஏற்படலாம். பொறுமையுடன் செயலாற்றுவது சிறந்தது.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்று விருப்பமான பலன்கள் கிடைக்காது. இன்றைய சவால்களை சந்திப்பது கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று அமைதியாக இருங்கள். தேவையற்ற செலவுகள் செய்ய நேரலாம். எனவே சேமிப்பது இன்று கடினம். இதனால் கவலைகள் உண்டாகும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய வாய்ப்புகள் மூலம் பலனடைவீர்கள். வளர்ச்சி காண்பீர்கள். இதனால் திருப்தி உண்டாகும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்வீர்கள். இது உங்கள் வெற்றிக்கு உதவும். மேலும் நீங்கள் கடினமான பணிகளிக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் நம்பிக்கை உணர்வின் காரணமாக உங்கள் இலக்குகளை அடைவீர்கள். பணி நிமித்தமான பயணத்திற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு நன்மைகள் நடக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி இலக்குகளை அடைவீர்கள்.