நாள்: 22.09.2022


நல்ல நேரம் :


காலை 10.45 மணி  முதல் 11.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் –தெற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று பொறுமையான அணுகுமுறை தேவை. திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உறுதியான அணுகுமுறை தேவை. பணியிடச் சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணியில் தாமதங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உற்சாகமான மகிழ்சிகரமான நாள். இன்றைய தினத்தை கொண்டாடி மகிழ்வீர்கள். இது உங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும்.உங்கள் விருப்பங்களை திருப்திகரமாக நிறைவேற்றும் நாள். நிதியைப் பொறுத்தவரை இன்று திருப்திகரமாக இருக்கும். இன்று நீங்கள் பணம் சேமிப்பீர்கள்.உங்கள் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்றைய நாளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்கவும். அதனால் சில பிரச்சினைகள் ஏற்படும். எனவே சிறிது கவனமுடன் இருக்க வேண்டும்.இன்று பணபுழக்கம் போதுமானதாக இருக்காது. தேவையற்ற செலவினங்கள் அதிகமாக இருக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பலன்கள் தாமதமாகக் கிடைக்கும். அதிகம் எதிர்பார்க்காதீர்கள். பிரார்த்தனையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக திட்டமிடுங்கள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். இன்று அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. உங்கள் வளர்ச்சி குறித்து கவலைப்படுவீர்கள். இன்று அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். இன்று பணியில் உங்களிடம் பொறுமை காணப்படாது. இதனால் தவறுகள் நேரலாம். மனதை நிலைப்படுத்தி பணியாற்ற வேண்டும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களின் சொந்த முயற்சி மூலம் வளர்ச்சி காணப்படுகின்றது. வெற்றி நிச்சயம்.பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பு பாராட்டைப் பெறும். உங்கள் பணியின் தரத்தை மேம்படுத்துவீர்கள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று சுறுசுறுப்பான மன நிலையில் காணப்படுவீர்கள். மிகுந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். சுய வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள். உங்களிடம் மாற்றம் உணர்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதற்கு உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கையே காரணம்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இதற்கு உங்களிடம் காணப்படும் தன்னம்பிக்கையே காரணம்.பணியில் வெற்றி காண மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். எனவே சுமுகமாக பணிகள் நடைபெற திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று சிறிது சோம்பலுடன் காணப்படுவீர்கள். மனதில் குழப்பம் காணப்படும். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இத்தகைய உணர்வுகளை தவிர்த்தல் நலம்.இன்று முழுவதும் பணியில் முழுகியிருப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியான நாள். இன்றைய செயல்களின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகளையும் இன்று எளிதாகச் செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத பண வரவுகள் காணப்படும். நீங்கள் ஆச்சரியப்படும் அளவில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிலவும்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று சிறந்த அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். உங்கள் அணுகுமுறையில் வளைந்து கொடுக்கும் போக்கு காணப்படும். உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள்.அவர்களுடன் வெளியிடங்களுக்கு செல்வீர்கள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, உங்களின் சொந்த முயற்சி மூலம் இன்று நீங்கள் அபாரமான வளர்ச்சி காண்பீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். இன்று அர்ப்பணிப்புடன் பணி புரிவீர்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் கானப்படும். வங்கியிருப்பை நல்ல முறையில் பராமரிப்பீர்கள். திருப்தி நிலவும்.