RasiPalan Today June 21:


நாள்: 21.06.2023 - புதன்கிழமை


நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் விலகும். குழந்தைகளின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். செயல்பாடுகளில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


எதிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய தொழில் நிமித்தமான முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.


மிதுனம்


பொருளாதார நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய பொருட்சேர்க்கை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.


கடகம்


வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் அனுபவம் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.


சிம்மம்


உத்தியோக பணிகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். தவறிய சில வாய்ப்புகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாமதம் குறையும் நாள்.


கன்னி


நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் அமைதி உண்டாகும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


துலாம்


உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். கலை சார்ந்த பணிகளை பற்றிய அனுபவம் ஏற்படும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். குழப்பம் குறையும் நாள்.


விருச்சிகம்


முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாகும். திருப்தி நிறைந்த நாள்.


தனுசு


கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்களிடத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


மகரம்


குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபவிரயங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். தனவரவுகளில் இருந்த தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொன், பொருள் மீதான ஆர்வம் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.


கும்பம்


மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். ஆன்மிக பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த துறைகளில் நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.


மீனம்


தனவரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.