இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 10, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். வெற்றி நிறைந்த நாள்.
ரிஷப ராசி
மற்றவர்களுடன் பேசும் பொழுது கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். திடீர் பயணங்கள் ஏற்படும். சக வியாபாரிகளால் சில மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
மிதுன ராசி
எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பணி சார்ந்த முயற்சிகளில் ஆதாயம் ஏற்படும். உறவுகளிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். அலுவலகப் பணிகளை பகிராமல் மேற்கொள்வது நல்லது. பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். அசதி மறையும் நாள்.
கடக ராசி
குடும்பத்தில் சிறு சிறு சலசலப்புகள் தோன்றி மறையும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உயர் அதிகாரிகளால் மனதில் குழப்பம் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். வழக்கமான செயல்களிலும் கவனத்துடன் செயல்படவும். வியாபாரப் பணிகளில் சில மந்தமான சூழல் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
சில முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். தேவைக்கு உகந்த வரவுகள் கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு உயரும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான இழுபறியான வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். சகோதரிகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
கன்னி ராசி
உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பல நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பாராத அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். தாமதம் விலகும் நாள்.
விருச்சிக ராசி
நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலை குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் மத்தியில் ஆதரவு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
தனுசு ராசி
தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களை புரிந்து செயல்படுவார்கள். தடங்கல் விலகும் நாள்.
மகர ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மனதில் புதிய பாதைகள் புலப்படும். நட்பு மேம்படும் நாள்.
கும்ப ராசி
எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். சக பணியாளர்களின் பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மீன ராசி
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் செயல்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். பயணங்களில் அலைபேசியை தவிர்க்கவும். வியாபார முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கவலை மறையும் நாள்.