நாள்: 10.05.2024 


கிழமை: வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.00 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உறவினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


ரிஷபம்


திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான புதிய ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.


மிதுனம்


செய்கின்ற செயல்களை கவனத்துடன் செய்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை சிலருக்கு உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் நிதானம் வேண்டும். உதவி கிடைக்கும் நாள்.


கடகம்


சிந்தனைகளின் மூலம் புதிய தெளிவுகள் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நன்மை நிறைந்த நாள்.


சிம்மம்


வியாபார இடமாற்ற சிந்தனைகள் உண்டாகும். கற்றல் திறனில் சில புதுமைகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் ஏற்படும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.  ஆக்கபூர்வமான நாள்.


கன்னி


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்களில் ஈடுபாடு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். புதிய வேலை சாதகமாக அமையும். புரிதல் வேண்டிய நாள்.


துலாம்


பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். அரசு பணிகளில் சில விரயம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


விருச்சிகம்:


தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். நிதானமான செயல்பாடுகள் வெற்றியை உண்டாக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். நண்பர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.


தனுசு


இழுபறியாக இருந்துவந்த சில வரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் மகிழ்ச்சி ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். பிடிவாத போக்கினை குறைத்து சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.


மகரம்


புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்து சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள்.


கும்பம்


பயணங்களால் அனுபவம் மேம்படும். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகள் நிறைவேறும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். மருத்துவத்துறையில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.


மீனம்


முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.