நாள்: 28.01.2024 - ஞாயிற்றுகிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல்  மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமையான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். வாகன பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும்.  கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.


மிதுனம்


மனதில் தன்னம்பிக்கை மேம்படும். சிறுதொழில் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.


கடகம்


வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். பாராட்டு நிறைந்த நாள்.


சிம்மம்


குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும்.  திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.


கன்னி


பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். சில முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.


துலாம்


மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். சாந்தம் நிறைந்த நாள்.


விருச்சிகம்:


குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சட்டத்துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனை அதிகரிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள்.


தனுசு


வெளி உலகத் தொடர்புகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் உண்டாகும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் அகலும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பயணங்களில் கவனம் வேண்டும். பக்தி நிறைந்த நாள்.


மகரம்


விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


கும்பம்


சமூகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களால் நன்மை ஏற்படும். நண்பர்களுடன் நீண்ட தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிப்படையான குணத்தினால் மதிப்பு மேம்படும். நட்பு நிறைந்த நாள்.


மீனம்


தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கால்நடை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.