நாள்: 23.01.2024 - செவ்வாய் கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
ரிஷபம்
வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
மிதுனம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தோற்றப் பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். நலம் நிறைந்த நாள்.
கடகம்
மனம் விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணங்களின் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம்
சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். புதுவிதமான அணிகலன்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.
கன்னி
சமூகப் பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகப் பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதில் மாற்றம் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.
துலாம்
நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனை மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனை உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பூர்வீக சொத்துக்களை விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் ஏற்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்
தனுசு
உறவினர்களின் சந்திப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வணிகம் சார்ந்த விஷயங்களில் சிந்தனை மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
மகரம்
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். அரசு சார்ந்த பணிகளில் புரிதல் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். புதிய காதணிகள் வாங்குவதில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்கு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அசதி குறையும் நாள்.
மீனம்
பெரியோர்களின் ஆலோசனைகளால் செயல்களில் இருந்துவந்த குழப்பம் விலகும். புது விதமான சிந்தனைகள் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் மேம்படும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரப் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.