இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today Decmber 01, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷம்:
சந்தேக உணர்வுகளைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியமாகும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.
ரிஷபம்:
மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் மறையும் நாள்.
மிதுனம்:
மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைத் திறனில் மாற்றங்கள் உண்டாகும். கால்நடைப் பணிகளில் லாபம் ஏற்படும். கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அன்பு மேம்படும் நாள்.
கடகம்:
கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிற்றின்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பீர்கள். அழகு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உணர்வுப்பூர்வமாக சிந்திப்பதை விடச் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
சிம்மம்:
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் அமைதியின்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பாராட்டு நிறைந்த நாள்.
கன்னி:
உத்தியோக பணிகளில் திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரப் பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெற்றி கிடைக்கும் நாள்.
துலாம்:
விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல் மற்றும் காலதாமதம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
விருச்சிகம்:
தோற்றப்பொலிவில் மாற்றங்கள் பிறக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிதானமாக முடிவுகளை எடுக்கவும். சமூகப் பணிகளில் செல்வாக்கு நிலை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் பொறுமை வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
தனுசு:
உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், மந்தமும் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சிறு குழப்பம் விலகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பணிகளில் உள்ள நெருக்கடிகள் விலகும். செலவுகளின் தன்மையறிந்து செயல்படவும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
மகரம்:
வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். புதிய கலைகள் விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பேச்சுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். முகத்தில் பொலிவும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.
கும்பம்:
கமிஷன் சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். பிரயாணம் நிறைந்த நாள்.
மீனம்:
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தனித் திறமைகளை அறிந்து கொள்வீர்கள். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவுகள் உருவாகும். ஆன்மிக தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். விரும்பிய பொருட்களை வாங்குவதில் சிந்தித்துச் செயல்படவும். கீர்த்தி நிறைந்த நாள்.