நாள்: 27.12.2023 - புதன்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சகோதரர் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருட்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். செலவுகள் நிறைந்த நாள்.


மிதுனம்


எதிலும் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக சிலரின் அறிமுகம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் வளைந்து செல்வது நல்லது. லாபம் நிறைந்த நாள்.


கடகம்


வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு உண்டாகும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்  அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.


சிம்மம்


எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வழியில்  விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.


கன்னி


இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்பு தேடி வரும். ஆர்வம் நிறைந்த நாள்.


துலாம்


விமர்சித்தவர்கள் உங்கள் உதவிகளை நாடுவார்கள். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியம் கைகூடும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். எதிர்ப்புகள் நிறைந்த நாள்.


விருச்சிகம்:


இனம்புரியாத   சில சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்கள் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். மறதி நிறைந்த நாள்.


தனுசு


மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை இணைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் வரவுகள் மேம்படும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


மகரம்


பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.


கும்பம்


பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை ஏற்படும். வாகன மாற்ற முயற்சிகள் ஈடேறும். சொத்து வழக்கில் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பிள்ளைகளின் வருங்காலம் சார்ந்து சில பணிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.


மீனம்


வியாபாரம் நிமிர்த்தமாக வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில்  ஒத்துழைப்பு   உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் உள்ள இழுபறிகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மந்தமான சூழ்நிலைகள் அமையும். திறமைகள் வெளிப்படும் நாள்.