நாள்: 14.11.2022


நல்ல நேரம்:


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை






 

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

 

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை




இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விவேகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். கைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படும். எதையும் சமாளிக்கக்கூடிய மனோபலம் உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.


மிதுனம்


தனவரவு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் மூலம் தனவரவிற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


கடகம்


மனதில் சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் ஏற்படும். விருத்தி நிறைந்த நாள்.


சிம்மம்


நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.


கன்னி


துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் எண்ணிய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.


துலாம்


சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் ஆலோசனைகளின் மூலம் தெளிவு உண்டாகும். திட்டமிட்ட செயல்பாடுகளில் எண்ணிய முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். ஆசைகள் நிறைந்த நாள்.


விருச்சிகம்


முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். தடைகள் குறையும் நாள்.


தனுசு


எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தடைபட்ட சில வரவு கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி தோன்றி மறையும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உதவி கிடைக்கும் நாள்.


மகரம்


பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உறுதி வேண்டிய நாள்.


கும்பம்


மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். பணிகளில் உடல் உழைப்பு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உழைப்பு நிறைந்த நாள்.


மீனம்


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கலைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். சிற்றின்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.