நாள்: 13.05.2023 - சனிக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 


சூலம் - கிழக்கு


மேஷம்


மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சாதகமான நாள்.


ரிஷபம்


வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கௌரவ பொறுப்புகளின் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


மிதுனம்


வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனைவியுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கடகம்


கமிஷன் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். நகைச்சுவையான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவுபெறும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் கவனம் வேண்டும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகளால் தடுமாற்றம் உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.


சிம்மம்


உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நறுமண பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்கின்ற செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வரவுகள் நிறைந்த நாள்.


கன்னி


உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.


துலாம்


மனதில் புதுமையான சிந்தனைகள் பிறக்கும். சமூக பணிகளில் நிதானம் வேண்டும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாஸ்திரம் தொடர்பான தெளிவு பிறக்கும். இசை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நிர்வாக பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


விருச்சிகம்


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப பெரியவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். இனம்புரியாத கனவுகள் அவ்வப்போது ஏற்படும். மறதிகள் குறையும் நாள்.


தனுசு


மனதில் தன்னம்பிக்கையுடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். புதுவிதமான கண்ணோட்டத்தின் மூலம் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதிய ஆசைகள் மற்றும் விருப்பங்கள் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நபர்களால் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். பக்தி நிறைந்த நாள்.


மகரம்


உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெற்றி நிறைந்த நாள்.


கும்பம்


அக்கம்-பக்கம் இருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பொறுப்புகளின் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உதவிகள் கிடைக்கும் நாள்.


மீனம்


சஞ்சலமான சிந்தனைகளால் செய்கின்ற செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியில் உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.