நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 3:30 மணி முதல் 4:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்:
பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இரவு - 1:30 மணி முதல் 2:30 மணி வரை
ராகுகாலம்:
காலை- 4:30 மணி முதல் 6 மணி வரை
குளிகை:
மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை
எம கண்டம்:
பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
மேற்கு, வெல்லம்
சந்திராஷ்டமம்:
பூரம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
பக்தி மேலோங்கும் நாள். இறைவழிபாடு தேடிச் செல்வீர்கள். தடைகள் உடைய இறை வழிபாட்டை நாடுவீர்கள். நினைத்தது கைகூட இன்றைய நாள் அனுகூலம் தரும். ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடத்தினால், வீண் அபராதங்களை தவிர்க்கலாம்.
ரிஷபம்:
நினைத்த லாபம் கிடைக்கும் நாள். காத்திருந்த நல்ல சேதி வீடு தேடி வரும். முதலீடுகள் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். கவனமாக காரியங்களை கையாளவும். அதிக இன்பமும், அதிக சோகமும் உடலுக்கு நல்லதல்ல. கிடைப்பதை வைத்து மனநிறைவு அடையுங்கள்.
மிதுனம்:
நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அவர்களுடன் சந்தோசமாக இன்றைய பொழுதை கடப்பீர்கள். நல்ல விருந்த, மகிழ்ச்சி என இன்றைய நாள் செல்லும். கவனமாக வார்த்தைகளை விடவும். செலவுகள் வரும்; சமாளிப்பீர்கள். பெற்றோரிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுங்கள். குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும்.
கடகம்:
திடீர் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். நல்ல சேதிகள் தொலைபேசி வழியாக வரலாம். நீண்ட நாள் தள்ளிப்போன விசயங்கள், இன்று நடைபெறலாம். வாங்க நினைத்த பொருட்களை வாங்க முயற்சிப்பீர்கள். இன்று ஊரடங்கு என்பதால், அதை தள்ளிப்போடுவதை தவிர வேறு வழியில்லை. உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
சிம்மம்:
எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கும். எதையும் திருப்தியாக செய்து முடிக்க விரும்பும் உங்களுக்கு சில தடைகள் வரலாம். ஆனாலும் அதை கடந்து நினைத்ததை முடிப்பீர்கள். கலைத்துறையில் நல்ல ஆர்வம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் கலைத்தாகத்திற்கு ஏற்ற புதிய சிந்தனைகள் இன்று தோன்றலாம்.
கன்னி:
எதற்கெடுத்தாலும் பயம் கொண்டு, இன்றைய நாளில் சிக்கலை சந்திக்கலாம். துணிந்து எதையும் முடிவு செய்ய வேண்டும். குழப்பம் இருந்தால், இன்று ஓரு நாள் தள்ளிவைக்கலாம். எது நடக்குமோ அதை அறிந்து செயல்படுக. பெற்றோர் வழியில் சுபச் செலவுகள் தவிர்க்க முடியாது. உறவினர்கள் வரலாம். புதிய முயற்சிகளுக்கு எண்ணங்கள் இழுத்துச் செல்லும்.
துலாம்:
இன்றைய ஊரடங்கு, அதிகம் உங்களுக்கு தான் பயனளிக்கப் போகிறது. நல்ல ஓய்வு பெற போகிறீர்கள். நல்ல ஓய்வு உங்கள் உடல் நலனுக்கும் நலன் பயக்கும். எனவே குடும்பத்தாருடன் நன்கு ஓய்வு எடுங்கள். வெளியே செல்வதை தவிர்க்கவும். வாகனத்தில் கவனம் தேவை. வீண் சண்டைகளை குடும்பத்தாரிடம் தவிர்க்கவும்.
விருச்சிகம்:
என்ன தான் ஊரடங்காக இருந்தாலும், உங்களுக்கு செலவு என்பது இன்று கட்டாயம் ஏற்படும். அது சுபச்செலவாக கூட இருக்கலாம். ஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில், 10 ரூபாய் செலவு செய்ய நேரிடும். உடல் நலனில் அக்கறை தேவை. வீண் குழப்பங்களை தலையில் ஏற்ற வேண்டாம்.
தனுசு:
நல்ல நன்மைகள் கூடி வரும் நாள். நல்லதே நடக்கும். சில நாட்களாக இருந்த உடல்நலக்கோளாறு சரியாகும். குழந்தைகள் பற்றிய கவலை தீரும். பெற்றோர் ஆரோக்கியம் பெறுவர். தொலைபேசி வழி நல்ல தகவல் வரும். நீண்ட நாள் எதிர்பார்த்த பாக்கிகள் வந்து சேரலாம். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.
மகரம்:
இன்று நீங்கள் கவனமாக பிறரிடம் பேச வேண்டும். முடிந்தவரை அமைதி காப்பது நல்லது. தேவையற்ற இடங்களில் தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். அது நல்லதல்ல. குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். மருத்துவர்கள் ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம்:
வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும் நாள் இன்று. உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். நீங்கள் எடுத்த முடிவுக்கு பெற்றோரிடத்தில் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் உங்கள் உத்தரவை பின்பற்றுவார்கள். மனைவி அல்லது கணவரிடம் சண்டை வேண்டாம். தூரத்து உறவுகள் திடீர் வரவு இருக்கலாம்.
மீனம்:
பெரிய பாதிப்பு, சிறிதாய் மாறும். கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பம் விலகி, நிம்மதி கிடைக்கும். எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கலாம். உடல் நலனில் அதிக கவனம் செலுத்தவும். தள்ளிப் போன விசயங்கள் மீண்டும் தொடங்கப்படலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்