நல்ல நேரம்:
காலை- 6 மணி முதல் 7 மணி வரை
மாலை- 3:30 மணி முதல் 4:30 மணி வரை
பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இரவு - 1:30 மணி முதல் 2:30 மணி வரை
ராகுகாலம்:
மாலை- 4:30 மணி முதல் 6 மணி வரை
குளிகை:
மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை
எம கண்டம்:
பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
மேற்கு , வெல்லம்
சந்திராஷ்டமம்:
அனுஷம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
திடீர் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் வழி சந்திப்பு இருக்கலாம். செலவுகள் இருக்கும். விருந்து, உபசரிப்புகள் இருக்கும். நீண்டநாள் நினைத்ததை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை.
ரிஷபம்:
வீண் கவலைகள் குடிகொள்ளும். பிள்ளைகள், பெற்றோர் உடல்நிலை குறித்து அசட்டை வேண்டாம். உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். புதிய சந்திப்புகள், அதனால் சிக்கல் வரலாம்.
மிதுனம்:
இன்று உங்கள் முயற்சிகள் தாமதம் ஆகலாம். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக பணிகளின் கவனம் செலுத்தவும். சக பணியாளர்களிடம் கோபமான வார்த்தைகளை தவிர்க்கவும். உயர்அதிகாரிகள் நெருக்கடியை சந்திக்கலாம்.
கடகம்:
தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நாள் இன்று. இதற்கு முன் சந்தித்த தொழில் சரிவுகளை ஈடு செய்வீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்வாக பழகுங்கள். நண்பர்கள் வழி உதவிகள் தேடி வரும். புதிய முயற்சிகள் பலன் தரும். இறைவழிபாடு மேன்மை தரும்.
சிம்மம்:
மனதிற்குள் தேவையற்ற குழப்பங்களும், பயமும் குடிகொள்ளும். குடும்பத்தாரிடம் வீண் கோபங்களை தவிர்க்கவும். எதையும் அப்படியே நம்பிவிட வேண்டாம். வருத்தம் மனதோரம் இருந்தாலும், அதை கடந்து பயணியுங்கள். கோயில் வழிபாடு பயன்தரும்.
கன்னி:
தொழில் ரீதியாக கடும் போட்டியை சந்திக்க நேரிடும். அனைத்தையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். முடிந்தவரை வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகள் பலனளிக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். பெற்றோரிடத்தில் அனுசரித்துச் செல்லுங்கள்.
துலாம்:
பணம், தன வரவு தாராளமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இறை நம்பிக்கை மேலோங்கும். நீண்ட நாள் பேசாத உறவுகளுடன் பேச முயற்சிகள் வரலாம். பிரிந்தவர்கள் சேரலாம்.
விருச்சிகம்:
அனுஷத்தில் சந்திராஷ்டமம் தொடர்வதால், இன்றும் கொஞ்சம் கவனம் தேவைப்படுகிறது. புதிய முயற்சிகள் வேண்டாம். எதிர்பார்த்தது கிடைக்காது. மன உளைச்சல் வரலாம். பயம் தொடரும். மாலைக்கு மேல் மன நிம்மதி அடையும். வீட்டில் நல்ல விருந்து உபசரிப்பு இருக்கும்.
தனுசு:
நன்மை நாடி வரும் நாள். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழி மகிழ்ச்சியான செய்திகள் வரலாம். வழக்கு வம்புகளில் இருந்து மீண்டு வரலாம். மனைவி அல்லது கணவரின் ஆலோசனையை கேட்டு வழிநடந்தால் இன்னும் நல்லது.
மகரம்:
செலவுகள் தேடி வரும். வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். பிள்ளைகள், பெற்றோர் வழி மருத்துவ செலவுகளை சந்திக்கலாம். வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க கோயில் வழிபாடு பலன் தரலாம். உறவினர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.
கும்பம்:
ஆதாயம் வீடு தேடி வரும். சின்ன மீனை போட்டு பெரிய மீனை தூக்கும் நாள். தொழில் ரீதியான மகிழ்ச்சியான தகவல் வரலாம். வெளிநாடு, வெளியூர் பயணங்கள் குறித்த தொலைபேசி வழி தகவல்கள் வந்து சேரும். தொழில் ரீதியான முன்னேற்றம் சாத்தியம்.
மீனம்:
உடல் நலம் சுகம் காணும் நாள். குடும்பத்தாருடன் மகழ்வாக இன்றைய நாளை கடத்தவும். போக்குவரத்து பயணங்களில் கவனம் தேவை. பிக்பாக்கெட் தொந்தரவுகளை சந்திக்கலாம். மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்