நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்:
பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இரவு - 9:30 மணி முதல் 10:30 மணி வரை
ராகுகாலம்:
காலை- 9 மணி முதல் 10:30 மணி வரை
குளிகை:
காலை 6 மணி முதல் 7:30 மணி வரை
எம கண்டம்:
பகல் 1:30 மணி முதல் 3 மணி வரை
சூலம், பரிகாரம்:
கிழக்கு , தயிர்
சந்திராஷ்டமம்:
விசாகம், அனுஷம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
நன்மைகள் கூடி வரும். நல்லவர்கள் சந்திப்பு கிடைக்கும். குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கை கூடலாம். கோயில், வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தாருடன் பயணித்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்:
வீண் செலவுகள் வந்து சேரும். வாகன, மருத்துவ வழி செலவுகளால் நெருக்கடி ஏற்படலாம். திட்டமிட்டவை திசைமாறி போகலாம். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வீண் பயணத்தை தவிர்ப்பது இன்றைய நாளில் நலன் தரலாம்.
மிதுனம்:
வியாபாரத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும் நாள். கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொழில் போட்டிகள் குறையும். தொலைதூர பயணம் குறித்த தகவல் வரலாம். தொலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
கடகம்:
உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் மெனக்கெடல் வேண்டாம். மருத்துவர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை பெறுக. கிடைக்கும் ஓய்வை நன்கு பயன்படுத்தி உடல் நலனில் அக்கறை காட்டவும். வீண் அலைச்சலை தவிர்க்கவும்.
சிம்மம்:
சிந்தனை மேலோங்கும் நாள். ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்படவீர்கள். வீண் குழப்பங்கள் சூழ்ந்து காணப்படலாம். ஆனால், அவற்றை சரிசெய்யும் மருந்தும் உங்களிடமே இருக்கும். கோயில் வழிபாடு பயன்தரலாம்.
கன்னி:
தொழில் சார்ந்த முடிவுகளில் கவனம் தேவை. வீண் செலவுகள், நஷ்டம் தேடி வரலாம். பொருட் செலவுகளை தவிர்க்க கவனமாக செயல்படவும். இறைவழிபாடு பலன் தரும். வாகன போக்குவரத்தில் கவனம் தேவை.
துலாம்:
எடுத்த காரியங்களை தாமதமாக முடிக்க நேரிடும். சரியான திட்டமிடல் இல்லாமல் சொதப்புவீர்கள். குடும்பத்தார் உடல்நலனில் அக்கறை வேண்டும். சந்தேகம், மனக்குழப்பம் கவலை தரும். நல்ல விருந்து உண்டு மகிழ வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்:
சந்திராஷ்டமம் சேர்ந்து குழப்பம், அலைச்சல், மனசோர்வு தரலாம். தேவையற்ற பயம் குடிகொள்ளும். நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கலாம். பொருளாதார பயம் குடிகொள்ளும். உடல் நலனில் அதிக அக்கறை வேண்டும்.
தனுசு:
நண்பர்கள், உறவினர்கள் வழி பகை வந்து சேரும். விழாக்களில் பங்கேற்கும் போது கவனம் தேவை. வீண் வாதங்கள் வேண்டாம். வழக்கு வழி தொல்லை வரலாம். மருத்துவமனை செல்லும் சூழல் ஏற்படலாம். முடிந்தவரை முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.
மகரம்:
கோபம் மேலோங்கும். கோபத்தால் வீண் மன உளைச்சல் ஏற்படலாம். தகராறு, சண்டை, வழக்குகள் வரலாம். விழாக்களில், நிகழ்ச்சிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெற்றோர், மூத்தோர் அறிவுரைகளை கேட்டு நடக்கவும்.
கும்பம்:
உங்கள் குணத்தால், செயலால், ஆற்றலால் மேன்மை அடைவீர்கள். உங்கள் நடவடிக்கைகளால் பெற்றோர், குடும்பத்தார் பெருமை அடைவார்கள். பொறுமையாக எந்த காரியத்தையும் அனுகினால், நல்ல பலன் கிடைக்கும் நாள் இன்று.
மீனம்:
தொழில் ரீதியான லாபம் வந்து சேரும். எதிர்பார்த்த வரவு இருக்கும். கேட்டது கிடைக்கும். விழாக்களில் கலந்து மகிழ்வீர்கள். புத்தாடை, பரிசுகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் விருந்து உண்டு, நண்பர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை கடக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்