ஜோதிடத்தில் ஒரு முக்கியமான நிழல் கிரகம் என்று அழைக்கப்படுவது ராகு பகவான். ராகுவிற்கு சொந்த ராசி என்று எதுவும் இல்லை. அவர் எந்த ராசியில் அமர்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ, அந்த கிரகத்தின் தன்மையை உள்வாங்கிச் செயல்படுவார். ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கி வக்ர முறையில் (பின்நோக்கி) பயணம் செய்யக்கூடியவர். இவர் ஒரு ராசியை விட்டு நகரும்போது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனைகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்துவார்.
அந்த வகையில் நவம்பர் 25-ம் தேதி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து விலகி மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ராகு பெயர்ச்சி அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் யோகம் மற்றும் பணவரவை அள்ளிக்கொடுக்கப்போகிறார். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
இதையும் படிங்க: Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
ரிஷபம்
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு நகர்வதால், நிதிநிலையில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைந்து மன அழுத்தம் நீங்கும். குறிப்பாக பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கான சூழல் அமையும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும்; தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறும். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். தொழில் மற்றும் முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கு 5-ம் இடத்திற்கு ராகு வருவதால், இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி வாழ்க்கையில் பிரகாசமான சூழல் உருவாகும். திருமணத்திற்காகக் காத்திருப்பவர்களுக்குப் பொருத்தமான வரன் அமையும். இந்த பெயர்ச்சி காரணமாக வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உயதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். பங்குச்சந்தை மற்றும் சொத்து முதலீடுகள் மூலம் சிறப்பான லாபம் கிடைக்கும்
மீனம்
மீன ராசியினருக்கு 8ம் இடத்திற்கு ராகு வருவதால் வளமான வாழ்க்கையையும் எண்ணற்ற நேர்மறை மாற்றங்களையும் அள்ளி கொடுக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் பல ஆசைகள் நிறைவேறப்போகிறது. புதிய வேலைக்கு முயல்பவர்களுக்கும், விசா/வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கும் நல்ல செய்தி தேடி வரும். மாணவர்கள் விரும்பிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவர். திருமண வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியையும் அன்யோன்யத்தையும் தரும். வருமானம் இரட்டிப்பாக அதிக வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பாராத பெரிய லாபம் வந்து சேரும்.
