அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.


புதன் பெயர்ச்சி:


டிசம்பர் மாதம் 13ஆம் தேதி புதன் பகவான் விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  உங்களுடைய ராசிக்கு 9ம் அதிபதியும் 12ம் அதிபதியுமான புதன் மூன்றாம் வீட்டில் பிரவேசிக்கும் பொழுது  செலவுகள் கட்டுக்குள் கொண்டு வருவீர்கள்.  மாதம் முழுவதும் நான் சம்பாதிக்கிறேன். ஆனால் சம்பாதிக்கும் பணம் கையில் நிற்கவில்லை என்று வருத்தப்பட்டு இருந்த உங்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.  சிறு,சிறு செலவுகளை எப்படி குறைக்கலாம்? என்று திட்டம் தீட்டுவீர்கள். 


கடந்து வந்த பாதைகளை சற்று அசைபோடும் காலமாகவே டிசம்பர் மாதம் உங்களுக்கு அமையப்போகிறது.  உங்களை ஏமாற்றியவர்கள் குறித்து அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்குவீர்கள்.  துலாம் ராசிக்கு ஏற்கனவே பன்னிரண்டாம் பாவத்தில் கேது பகவான் அமர்ந்து, உங்களை கிட்டத்தட்ட ஆன்மீக பாதைக்கு கொண்டு சென்றிருப்பார்.  12ஆம் அதிபதி மூன்றாம் பாவத்தில் அமரும்போது,  புண்ணியத்தை சம்பாதிப்பதற்காக கோவில்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பார்.


சூரியன் பெயர்ச்சி:


டிசம்பர் 16ஆம் தேதி சூரிய பகவான்  செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் இருந்து  குருவின் வீடான தனுசு ராசியில் நுழைகிறார்.  துலாம் ராசிக்கு லாபாதிபதியான சூரிய பகவான்  உங்களின் மூன்றாம் வீட்டில் பிரவேசிக்கும் போது தைரியமாக செயல்படும் காலகட்டமாக இருக்கும்.  உங்கள் செயல்பாடுகளில் துணிச்சல் மிகுந்து காணப்படும்.  வீட்டில் நீங்கள் எடுக்கும் முடிவு இறுதியானதாக இருக்கும்.  குருவின் வீட்டில் சூரியன் பிரவேசிக்கும் போது எதை எப்படி செய்ய வேண்டும்? யாரிடம் செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும்? என்ற  என்ற தெளிவான எண்ணத்தோடு செயல்படுவீர்கள்.


சூரியன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உங்களுடைய ராசிக்கு 12 ஆம் அதிபதி  பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்த கேது பகவான் போலவே செயல்படுவார்.  செலவுகளை கட்டுக்குள் வைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். கையில் இருக்கும் சேமிப்பு சிறிது கரைய வாய்ப்புண்டு.  மருத்துவ செலவுக்காக சிறிது பணம் செலவாகும்.  சூரிய பகவான்  சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் பயணம் செய்யும்பொழுது உங்களுடைய ராசி அதிபதி சுக்கிரன் உங்களுக்கு நன்மையே செய்வார் என்ற அடிப்படையில்,  எந்தவித தீங்கும் நடைபெறாமல்  காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும்.  லாபாதிபதி சூரிய பகவான் மூன்றாம் வீட்டில்  பிரவேசிக்கும் காலகட்டத்தில் இளைய சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.  தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கும் ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் ஒரு பொன்னான காலகட்டமாகவே அமையும்.  சூரிய பகவான் உத்திராட நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யும் பொழுது  நினைத்தது நடைபெறும்.  சாதிக்க வேண்டும் என நினைத்த காரியங்கள் கைக்கு வந்து சேரும்.


சுக்கிரன்  பெயர்ச்சி:


உங்கள் ராசி அதிபதி சுக்கிரன்  டிசம்பர் 25ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து  விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  உங்களுடைய ராசியாதிபதியும் எட்டாம் அதிபதியுமான சுக்கிரன் இரண்டாம் வீட்டில் இருப்பது உங்களுக்கு யோகத்தை கொண்டு வரும். இரண்டாம் வீட்டில் மூன்று நட்சத்திரங்களில் சுக்கிரன் பிரவேசிக்கும் போதும் உங்களுக்கு எந்தவிதமான தீங்கும் நடைபெறப் போவதில்லை. சுக்கிரன் குருவினுடைய நட்சத்திரத்தில்  பிரவேசிக்கும் பொழுது  நாள்பட்ட நோயிலிருந்து  விடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. 


குடும்பத்தாருடன் இணைந்த தூர பிரயாணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.  உடலில் சிறு, சிறு நோய்கள் வந்து போனாலும் மருத்துவத்தின் மூலமாக அவைகள் சரியாகும்.  சுக்கிரன் சனியினுடைய நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது  எண்ணங்கள் ஈடேறும் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பொங்கும். படிக்காமல் இருந்த உங்களுடைய பிள்ளைகள் புத்தகத்தை எடுத்து  படிக்க தொடங்கும் காலமாக அமையும்.  சற்று பழைய நினைவுகளை அசைபோடுவதற்கான காலகட்டமாகவும் இருக்கும்.  சுக்கிரன் கேட்டை நட்சத்திரத்தில் பதிவேசிக்கும் போது உங்களுடைய ராசிக்கு 12, 9ம் அதிபதி  நட்சத்திரத்தில் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் பிரவேசிக்கும் போது தனபாக்கியம்  உருவாகும்.  செலவுகள் கட்டுக்குள் வரும்.  நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


செவ்வாய் பெயர்ச்சி :


செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் அதிபதியும் இரண்டாம் அதிபதியும் ஆகி டிசம்பர் 27ஆம் தேதி தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார்.  வெற்றி ஸ்தானத்தில் இரண்டாம் அதிபதி பிரவேசிக்கும் போது இருக்கின்ற தொழிலில் முன்னேற்றம் அடையும்.  உயர் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.  குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுக்கப் போகிறீர்கள்.  நீண்ட நாட்களாக நீங்கள் காத்திருந்த ஒரு காரியத்தை நீங்களே முன் நின்று நடத்துவீர்கள்.  பயணங்கள் மேற்கொள்வதற்கான காலகட்டமாக அமையும்.  கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூடுவீர்கள். 


நண்பர்கள்  வகையில் ஆதாயம் உண்டு.  ஏதோ ஒரு காரியத்திற்காக உங்களுக்கு முதலீடு தேவைப்பட்டால் உங்கள் நண்பர்கள் மூலமாகவே அது ஈடேறும்.   காரியசித்தி ஏற்படுவதற்கான காலகட்டம்.  எதிரிகள் அடங்குவார்கள்.  செவ்வாய் பகவான் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உங்களுடைய ராசிக்கு 12-ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது பகவானால் உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவுகளும் வரப்போவதில்லை. அதே போல் தான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கும் செவ்வாய் பகவான். மூல நட்சத்திரம் உங்களுக்கு எந்த விதமான பிரச்சனைகளையும் கொண்டு வராமல், செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றித் தரப் போகிறார்.  செவ்வாய் பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது  எதிலும் வெற்றியைக் கொண்டு வரப் போகிறார்.  செவ்வாய் பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது கண்டிப்பாக தைரியம் ஆற்றல் புகழ் போன்றவை கூட போகிறது.


புதன் பகவான் விருச்சகத்தில் :


புதன் பகவான் விருச்சிக ராசியில் டிசம்பர் 28ஆம் தேதி நுழைகின்ற காலகட்டத்தில்  குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.   புதன் பகவானால்  ஆசிரியர்  பணியில்  ஈடுபட்டவருக்கு ஒரு நல்ல காலம் பிறக்கப் போகிறது. டிசம்பர் மாதம் முழுவதுமாகவே உங்களுக்கு ஏற்ற இறக்கமான காலகட்டமாக அமையப்போகிறது.  வாழ்த்துக்கள் வணக்கம் !!!