ஆண்டுதோறும் ஆனி மாதம் ஸ்ரீ வாராகி அம்மன் சுவாமிக்கு தமிழகத்தில் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்திலும் குறிப்பாக கரூர் மாவட்டத்திலும் உள்ள பல்வேறு வாராகி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா கடந்த 29 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் நகரப் பகுதி பிரம்ம தீர்த்தம் சாலை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு நாள்தோறும் மாலை 6 மணி அளவில் பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஸ்ரீ வாராகி அம்மன் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு 108 கலச அபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஆலயம் அருகே உள்ள சிவாலயத்தில் இருந்து பக்தர்கள் 108 கலசத்துடன் ஆலயம் வந்தனர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க பக்தர்கள் கொண்டு வந்த 108 கலச தீர்த்தத்தால் ஸ்ரீ வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு பக்தர்கள் வழங்கிய பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு ,பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை கட்டப்பட்டது.
பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி மாத நவராத்திரி நிறைவு நாள் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
இதே போல் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் வராகி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று காய்கறியால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதுபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் உள்ள வராஹி அம்மனுக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்