நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம் - பக்தியுடன் தேரை வடம் பிடித்த பக்தர்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

Continues below advertisement
நாகூா் நாகநாதசுவாமி கோயிலின் பிரமோற்சவ விழா தேரோட்டம்  வெகு சிறப்பாக தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோயில், மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றத் தலமாகவும், காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இக்கோயிலின் பிரமோற்சவ விழா கடந்த  ஜூலை 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக தொடங்கி நடைபெற்றுது. முன்னதாக நேற்று காட்சிக்கொடுத்த நாயனாா் வீதியுலாவும், ருத்திரசா்மா, சந்திரவா்மா்களுக்கு காட்சிக் கொடுத்தருளிய நிகழ்வும் நடைபெற்றது. பின்னர்  நேற்று காலை சுமாா் 11 மணி அளவில் ஸ்ரீதியாகராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
 

 
இரவு நிகழ்ச்சியாக, கைலாய வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அதைத் தொடா்ந்து ஸ்ரீதியாகராஜப் பெருமான் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், காலை 8.15 மணிக்கு நாகை மாவட்ட  ஆட்சியர்  அருண் தம்புராஜ், தமிழக  மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி  வைத்தார். விநாயகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் சுவாமி ஒரு தேரிலும், மற்றொரு தேரில் சுவாமி மற்றும் அம்பாளும் பிரம்மாண்ட தேரில் தியாகராஜப் பெருமானும் பக்கதர்களுக்கு காட்சியளித்தனர்.
 
 

 
ஐதீக முறைப்படி, பாரம்பரிய வீதிகளில் வலம் வந்த தேர் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த  திரளானோர் தேரோட்டத்தில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்ட எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில்  டிஎஸ்பி சரவணன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உடன் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் இராணி, செயல் அலுவலர் அசோக் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement