தமிழகத்தில்  கொரோனா தொற்று  இரண்டாவது அலை காரணமாக பல்வேறு ஆன்மீக தளங்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்து பூஜைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் உலகப் புகழ்பெற்ற ஆலயங்களில் தமிழக அரசு உத்தரவிற்கிணங்க பூஜைகள் மட்டுமே ஆலயத்தில் பணிபுரியும் சிவாச்சாரியார் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே பங்குகொண்டு பூஜைகள் மற்றும் புனஸ்காரங்கள் செய்து வருகின்றனர். 




கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி வட்டம் ,மறையூர் கிராமத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத ஸ்வாமி ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பஞ்சாமிர்தம், பால் ,தயிர், இளநீர், எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, திரு மஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.




பின்னர் ஆலய சிவாச்சாரியார் அழகன் முருகனுக்கு வெண்பட்டாடை உடுத்தி, வெள்ளிக் கவச அலங்காரம் செய்த பிறகு, அழகன் அழகு முகத்திற்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து பிறகு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி உதிரிப்பூக்கள் நாமாவளிகள் கூறிய பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத கிருத்திகை பூஜையின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். 




தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ காரணமாக ஆன்மீக தலங்கள் திறக்காமல் ஆலயத்தில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை, மாலை நித்திய பூஜைகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், மலையூர், அருள்மிகு ஸ்ரீ கல்யாண கனககிரி வேலாயுத சுவாமி ஆலயத்தில் வைகாசி மாத கிருத்திகை பூஜை நடைபெற்ற நிலையில் பக்தர்கள் இன்றி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கடந்த பல்வேறு மாதங்களாக பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் பூஜையில் ஆலய சிவாச்சாரியார் மற்றும் உதவியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.