குருப் பெயர்ச்சி பலன்கள் 2022


இந்தாண்டு தமிழ் புத்தாண்டில் குரு பெயர்வது மிக முக்கியமான நிகழ்வு. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவல் எல்லாருடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டது. இந்தாண்டு குரு பெயச்சியால் பலரின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் நிகழ இருக்கிறது. நவகிரகங்களில் குரு என்பவர் பிருகஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். ஒருவரின் வாழ்க்கையில் செல்வ வளங்களையும் யோகங்களையும் வழங்குபவராக பார்க்கப்படுகிறார் குரு பகவான். ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள், பிரச்சனைகள் இருந்தாலும் அவருக்கு குருவின் பார்வை சரியாக இருந்தால் அவருக்கு தீமைகள் குறைந்து நன்மைகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒருவரின் தொழில், வேலை, பணம் மற்றும் லாபம் ஆகியவைகளுக்கு குருவே காரணமாக அமைகிறார்.


கிரகங்களின் சுழற்சியே மனித வாழ்க்கையின் வளர்ச்சி என்பதும், கிரகப் பெயர்ச்சியாலே நம் செய்யும் செயல்கள் நல்லவிதமாக முடிவதும், தவறாக போவதும் நடக்கும் என்பது நாம் அறிந்ததே. அப்படி, இந்தாண்டு நம் வாழ்வில் என்னென்ன மாற்றஙகள் நிகழும்? தொழில் சிறக்குமா? புதிய முயற்சிகள் வெற்றி பெறுமா? லாபம் கிடைக்குமா? புதிதாக தொழில் தொடங்கும் திட்டத்தில் இருப்பவர்கள், தொடங்கலாமா? இந்தாண்டு நோய் இல்லாமல் நிம்மதியானதாக அமையுமா? இந்தாண்டு நமக்கு எப்படி இருக்கும்? நம் பொருளாதார நிலை ஏற்றம் காணுமா?  என்று பல கேள்விகளுடன் தமிழ் புத்தாண்டை வரவேற்பவர்களுக்கு, ராசிகாரர்களுக்கு ஜோதிடர்களின் குருப் பெயர்ச்சி பலன்கள் (Guru Peryarchi 2022 Palangal) இதோ!


இந்தாண்டு குரு 12 ஆம் இடமான மீன ராசிக்கு குரு பெயர்கிறார்.


மேஷம்:


விவேகத்துடன் செயல்படும் மேஷம் ராசி அன்பர்களே!


எந்த காரியத்தையும் வேகத்துடனும் விவேகத்துடனும் திட்டமிட்டு அற்புதமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். குரு பகவானின் இருப்பிடத்தைவிட, அவருடைய பார்வைக்கு அவ்வளவு பலன்கள் இருக்கிறது. அதன்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு 4,6,8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சொந்த வீடு வேண்டும் என்று ஆசைபடுபவர்களின் கனவுகள் நிஜமாகும் காலம், இது. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் கூடும். வெகுகாலமாக இருந்து வந்த சொத்துப் பிரச்சினைக்கு நல்ல முடிவு கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாகி விடுவார்கள். திட்டமிடாத பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். வாகன கனவுகள் பலிக்கும். திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்ற அமைப்பு மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாரதா அதிர்ஷ்ம் வந்து சேரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல செய்து வந்து சேரும். உடல்நிலையில் கவனம் தேவை.


ரிஷபம்:


நினைத்ததை சாதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே!


எதையும் சாதிக்கும் ஆண்டாக இருக்க போகிறது இந்த புத்தாண்டு. குருப் பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் பல அற்புத மாற்றங்கள் நடக்க இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருளில் இருந்த ரிஷப ராசி அன்பர்கள் ஒளிக்கு வர போகிறார்கள். புதிய வாயப்புகள் வந்து சேரும். நல்ல எதிர்காலம் அமைய இருக்கிறது. லாபம் கிடைக்க இருக்கிறது. திருமணம் யோகம் அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பிரதோஷ வழிபாடு செய்வது மேன்மை தரும்.


 மிதுனம்:


பிறர் நலனில் அக்கறை கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!


உங்களுக்கு இது சோதனை காலம்தான். ஆனால், கஷ்ட காலம் இல்லை என்பதை உணர வேண்டும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனமாக இருப்பது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும். கவனமுடன் செயல்பட்டால், நீங்கள்தான் வெற்றியாளர். பொருளாதார நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். செல்வம் சேரும் நேரம் இது. கொஞ்சம் பிரச்சனைகள் இருந்தாலும், உங்களுக்கு பண வரவு கிட்டும்.பொறுப்புகள் அதிகரிக்கும். விபரீத ராஜயோகம் ஏற்படும். போராட வேண்டிய காலக்கட்டம் இது. ஆனால், கவனமுடன் இருந்தால் உங்களுக்குதான் வெற்றி!


கடகம்:


கடைமை தவறாத கடக ராசி அன்பர்களே!


இந்த குருப்பெயர்ச்சியில் 3, 5 ஆகிய இடங்களில் உங்கள் மீது பார்வை படுவதால், உடல் சார்ந்த தொல்லைகள் நீங்கும். மகிழ்ச்சி பெரும். புதிய தொடக்கம் உண்டாகும். சோதனைகள் விலகும் காலம் இது. உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகும். சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும், இறுதியில் அது நன்மையிலேயே முடியும். பணம் சேரும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மேலும், தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சி காத்திருக்கிறது. இருளும், ஒளியும் சமமாக அமையும் ஆண்டாக அமைய இருக்கிறது.


சிம்மம்:


தெளிவான சிந்தனைக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!


இந்தாண்டு உங்களுக்கு பல விஷேசங்கள் வந்தடையும். தொழில், வேலை உள்ளிட்டவைகளில் வளர்ச்சி நிச்சயம். இந்தாண்டு லாபகரமானது. ஏற்றங்களுக்கு ஒரு குறையும் இருக்காது. எதை செய்வதற்கு முன்பும், சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும். எதிர்பாராத அதிஷ்டங்கள் காத்திருக்கின்றன. சொத்துகள் சேர இருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் ஏற்பட இருக்கிறது.




கன்னி:


எதையும் வெளிப்படையாக சொல்லும் கன்னி ராசி அன்பர்களே!


தொழில் மற்றும் பணி சார்ந்த மாற்றங்கள் ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். ஏற்றத்தைத் தரும் குருப் பெயர்ச்சியாக உங்களுக்கு இருக்கும். அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். ஆனால், நீங்கள் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், உங்களுக்கு விடிவு காலம்தான் இந்தாண்டு. கெடுதல்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.  சொத்துத் தகராறுகள் நீங்கும். பல புதிய வாய்ப்புகள் கதைவைத் தட்டும் காலமிது.ஆக, உற்சாகத்தை வழங்கும் குருப் பெயர்ச்சி இது.


துலாம்:


யோசித்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!


உங்களுக்கு இந்தாண்டு பல புதிய வரவுகள் காத்திருக்கிறது. உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. மனதில் மகிழ்ச்சி பெரும். வேலை, வியாபாரம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் பெரும். வளர்ச்சிக்கான கடன்கள் ஏற்படலாம். சொத்து வரவு இருக்கிறது. புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு இருக்கிறது. புத்துணர்ச்சியுடன் வளர்ச்சிக்கு வித்திடும் காலம் இது.


விருச்சிகம்:


இன்னல்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் திறன் படைத்த விருச்சிக ராசி அன்பர்களே!


உங்களுக்கு இந்தாண்டு தொடர்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. ஏற்றம் அதிகரிக்கும். விருச்சிக ராசிகளுக்கு விடிந்துவிட்டது எனலாம்.பொருளாதார வளர்ச்சி உறுதி. எண்ணங்கள் பலிக்கும். நினைத்தவைகள் நடக்கும். அனைத்தையும் செய்து முடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது எனலாம்.


தனுசு:


எல்லோரும் வளமுடன் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்ட தனுசு ராசி காரர்களே!


உங்களுக்கு இந்தாண்டு பல ஆச்சரியர்கள் காத்திருக்கிறது. அற்புத மாற்றங்கள் நிகழ இருக்கிறது. நற்பலன்கள் அதிகமாக இருக்கப் போகிறது. 8,10,12 ஆம் இடங்களை பார்க்க போகிறார், குரு, அதனால், தொழில், வேலை ஆகியவற்றில் இருந்த பிரச்சனைகள் நீங்க போகிறது. லாபம் அதிகரிக்கப்போகிறது. வாழ்க்கையில் வளர்ச்சி அதிகரிக்க இருக்கிறது. உங்களுக்கு இது ஒரு நல்லதொரு குருப் பெயர்ச்சி. உங்களின் சோதனைகளை தடுக்கும் குருப் பெயர்ச்சி இது.


மகரம்:


விடாமுயற்சியுடன் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் மகர ராசி அன்பர்களே!


உங்களுக்கு இந்தாண்டு அவஸ்தைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஏற்படும் காலமிது. தன்னம்பிக்கை பெருகும். பல நன்மைகள் துளிர்க்கும். சாதூர்யமாக செயல்பட்டால், எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறலாம். எல்லாமே, சிறப்பாக அமைய போகிறது. இது உங்களுக்கு வசந்த காலம்.


கும்பம்:


வலிமையும் மறு உருவமாய் திகழும் கும்ப ராசி அன்பர்களே!


உங்களுக்கு இது ஒரு சிறந்த ஆண்டாக அமையும். நிதானமாக செயல்பட்டால், உங்களுக்கு பல்வேறு மாற்றங்கள் காத்திருக்கிறது. சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், பல முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு அதிகரிக்கிறது. பொருளாதார நிலை குறித்து கவலை வேண்டாம். எல்லாமும் நன்மைகளில் முடியும் காலம். எதிர்காலத்தில் பல நலன்கள் கிடைக்கும்.


மீனம்:


இனிமையான இதயம் கொண்ட மீன ராசி அன்பர்களே!


இந்தாண்டு உங்கள் ராசியில் குரு இருப்பதால், பல நன்மைகள் வந்து சேரும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். நாசூக்காக செயல்பட்டால், முன்னேற்றம் உறுதிதான். சொத்துக்கள் சேரும். ஆண்டுகள் கடந்து நீடிக்கும் பிரச்சனைகளால் இருக்கும் கலக்கம் நீங்கும். கல்வி, வேலை, பொருளாதாரம் ஆகியவற்றில் வளர்ச்சி ஏற்படும். இது நல்லதொரு குருப் பெயர்ச்சி.  


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண