காதல பத்தி நீங்க என்ன நெனைக்கறீங்கனு தோழி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. ஒரு மேஜிக் ஷோ பார்க்கும் குழந்தை எப்படி மிகவும் ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியாக ஆடிப்பாடி துள்ளிக்குதிக்குமோ அது மாதிரி தான், காதலை எதிர்கொள்ளும் மனசும். அது இந்த பூவுலகில் ஆடிப்பாடி துள்ளிக்குதிக்கும். நான் சில ப்ரேக் அப்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் ப்ரேக் அப்பைச் சந்தித்து அதிலிருந்து மீள்கையில் மனதில் பதிவது புதிய காதல், புதிய உலகம், புதிய அனுபவம். இவற்றில் என்னைக் கடந்து சென்றவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் எப்போதும் என் நேசத்திற்குரியவர்கள். ப்ரேக் அப்களைச் சந்தித்தவர்கள் சொல்வது, "லவ்வெல்லாம் பாத்தாச்சு, அது போ...ர்" என இழுப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் அவர்கள் மனதில் இருப்பது காதலை முழுவதுமாக எதிர்கொண்டாகியாச்சு, காதலை முழுமையாக உள்வாங்கியாகிவிட்டது, காதலின் ஆழம் பார்த்தாகிவிட்டது என்பது மாதிரியான ஓர் சுவாரஸ்யமற்ற பதில் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காதலைப் பொறுத்தமட்டில், அது நாளுக்கு நாள் புதிது. காதலுக்கு காதல் காதலே புதிது. அப்படியான காதலை ஓர் வரையறைக்குள் எல்லைக்குள் கட்டமைக்கும் மனிதர்களை நான் பாவமாக பார்க்கிறேன் என்றார்.
மேலும் என் தோழி கூறியது, காதலை அவர்கள் சொல்வது போல் கடக்க முடியாது. மாறாக காதல் இயற்கையின் ஒரு துளி கிடையாது. அது ஒட்டுமொத்த இயற்கை. ஒட்டுமொத்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தை காதலில் கடப்பதென்பது பேராசை. ஆனால் காதல் கொண்டு பிரபஞ்சத்தை நிரப்புவது என்பது காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் செய்யவேண்டியது. இப்படி உலகம் குளிர காதல் செய்யுற உங்க காதல் வாழ்கையில இன்னைக்கு என்னனு ராசிக்கு ஏத்த மாதிரி தெருஞ்சுக்க இன்றைய லவ் ராசிபலனை படிங்க...
மேஷம்
ஃபேக் ஐடில உங்க ஆளுக்கு, லவ்வ பத்தி என்ன நெனக்கறீங்கனு கேட்டா, மைலேஜ் தராதுனு தெருஞ்சும் டூ ஹன்ட்ரேட் சிசி பைக் வாங்கறது மாதிரினு சொல்லுவாங்க. ஆனா நேர்ல உங்ககிட்ட லவ்வுங்கறது சாதாரண விசயம் இல்ல அது விக்ரமன் சார் படம்னு சொல்ற அளவுக்கு பேசீட்டு இருப்பாங்க. கம்பி கட்டற கதையெல்லாம் சொல்லீட்டு இருப்பாங்க. நீங்க மனசுல பாரத்தோட கேட்டுட்டு இருப்பீங்க. சோகமான நாள்.
ரிஷபம்
நீங்க ரொம்ப அப்பாவிங்க. எந்த அளவுக்குனா ஒரு மொக்க கதையில டபுள் ஆக்சன் வெச்சா எப்படி நல்ல ஸ்கிரிப்ட்னு விக்ரம் நம்பறாரோ அந்த அளவுக்கு அப்பாவிங்க. உங்க ஆளும் உங்கள ஏமாத்துவாங்க. ஏமாற்றமான நாள்
மிதுனம்
என்னதான் வித்தியாச வித்தியாசமா யோசுச்சு பல ட்ரிக்ஸ இம்ளிமெண்ட் பண்ணாலும் ஓடிடி படம் டெலகிராம்ல கிடைக்கற மாதிரி, உங்க ஆள்ட்ட என்னென்னமோ பேசி அவங்கள டைவெர்ட் பண்ணாலும் அவங்க இன்னைக்கு ஃபுல்லா அவங்க பெஸ்டி புராணம் தான் பாடுவாங்க. உங்களுக்கு வயிறே பத்தீட்டு எரிய வாய்ப்புகள் அதிகமாவே இருக்கு. எரிச்சலான நாள்.
கடகம்
பக்கம் பக்கமா நீங்களே வசனமா பேசீட்டு கடந்து போறது தானே வாழக்கைனு சொல்லுவீங்க. சம்பந்தமே இல்லாம உங்க ஆளும் ஆமாம்னு சொல்லுவாங்க. ஆனாலும் மனசுக்குள்ள அடி ஆத்தி பைத்தியமா இவன்... இவ்வளவு நேரம் நல்லாதான்யா பேசீட்டு இருந்தான்னு உங்க ஆளுக்கு தோனற அளவுக்கு பேசுவீங்க. பட் நீங்க ரிலாக்ஸ் ஆகிடுவீங்க. ரிலாக்ஸான நாள்.
சிம்மம்
ஒவ்வொரு முறையும் லவ் சக்சஸ் ஆக கடவுள வேண்டும்போதெல்லாம் பல்லி கத்தறத கேட்டுட்டு லவ்வு சக்சஸ்னு நெனைச்சு சந்தோஷபடுவீங்க. ஆனா ஏற்கனவே நீங்க வேண்டுன எட்டு லவ்வுக்கும் அந்த பல்லி கத்தியிருக்கும். உங்களுக்கு இருக்க மன தைரியத்ததான் பாராட்டனும். எட்டு லவ்வுக்கு பல்லி கத்தியும் ஒன்பதாவது லவ்வுக்கும் பல்லிய நம்பறீங்க பாருங்க அதுதாங்க நீங்க. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.
கன்னி
அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்னு உருகி உருகி உங்க ஆள்ட்ட பாடுவீங்க. உங்க கூட வந்தா நடு தெருவுலதான் நிக்கனும்னு சிம்பாளிக்கா சொல்றியானு உங்க ஆள் உங்க கலாச்சு விட்டுடுவாங்க. நோஸ் கட் டே.
துலாம்
யாருனே தெரியாதவங்க கல்யாணத்துல போய் நல்லா திருப்தியா சாப்டுட்டு வரலாமானு யோசுச்சு இருக்க உங்கிட்ட உங்க சொந்தகாரங்க நீ எப்போ கல்யாண சாப்பாடு போடுவனு கேப்பாங்க. லவ்வு கிவ்வு பண்ணா சொல்லு வீட்டுல நான் பேசறேனு சொல்லுவாங்க. நம்பீடாதீங்க. அம்புட்டும் வெசம். ஜாக்கரதையா இருங்க.
விருச்சிகம்
யுனிவர்சிட்டி ரிசல்ட்ஸ்ல நீங்க ரெண்டு அரியர் வாங்கீட்டு சோகமா உக்காந்து இருக்கும் போது எல்லா சப்ஜெக்ட்லயும் ஃபெயில் ஆன உங்க ப்ரெண்ட் ஜாலியா கடல போட்டுட்டு இனுப்பாங்க. ஆனா நீங்க எக்ஸாம்ல ஆல் க்ளையர் செஞ்சா உங்க லவ் சக்ஸஸ் ஆகும்னு சம்பந்தம்மே இல்லாம முடுச்சு போட்டு மண்டைய கொழப்பீட்டு இருப்பீங்க.
தனுசு
ரிங்டோனா மாத்துனா லைஃப் ஸ்டையிலே மாறுனதா ஃபீல் பண்ற உங்களுக்கு, லைஃப் எல்லாம் ஒன்னும் மாறல, நீங்க தான் மாத்தனேம்னு சொல்லி இன்னும் தீயா வேல செய்யனும் குமாருனு உங்க கூடவே இருப்பாங்க உங்க ஆள். நிம்மதியான நாள்.
மகரம்
சத்தமா பேசுனா செந்த வீட்டுலயே சாப்பாட்ட கட் பண்ற சூழல்ல இருக்க உங்களுக்கு எப்பவுமே பக்கபலமா இருக்க உங்க ஆள்ட்ட இன்னைக்கு மனசுவிட்டு ஜாலியா பேசுங்க. கோபபடாம பொறுமையா பேசுங்க. பொறுமை இன்னைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ்.
கும்பம்
எங்கெங்கயோ போய் ஏதேதோ ட்ரை ப்ணணி பல்பு வாங்கீட்டு இருந்த உங்களுக்கு, கையில வைரத்த வெச்சுட்டு வெள்ளிய தேடுன கணக்கா உங்களுக்கு ரொம்பவே க்ளோஸ் சர்க்கிள்ல தான் உங்க டீப் லவ் இருக்குனு புருஞ்சுப்பீங்க. மோஸ்ட் இம்பாட்ர்டண்ட் டே ஃபார் யூ.
மீனம்
ரெண்டு பேருமே நல்ல கவுர்மெண்ட் வேலைக்கு போனாதான் வீட்டுல பேசி கல்யாணத்த ஓ.கே பண்ண முடியும்னு உங்க ஆள் சீரியஸா பேசீட்டு இருக்கும் போது, ரெண்டு பேரும் நூறு நாள் வேலைல ஜாயின் பண்ணிக்கலாமானு கேட்பீங்க. ஜாலியா பேசுனா கதைக்கு ஆகாது. லவ்வுல சீரியஸ்னஸ் ஆல் சோ வெரி இம்பாட்ர்டண்ட். கவனமா இருங்க.