2-ஆம்  எண்ணில் பிறந்தவரா நீங்கள் ?


இரண்டாம் எண் சந்திரனின் ஆதிக்கத்தை கொண்ட பலமான ஒரு எண்.  மிகுந்த புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் உங்களுடைய வாழ்க்கையும்  புத்தி கூர்மையை பயன்படுத்தி முன்னேறுவதாகவே இருக்கும்.  வாழ்க்கையில் எந்த அடி எடுத்து வைத்தாலும்  சுயநலம் இல்லாமல் பொது நலனுக்காகவே இருக்கும்.  உங்களுடைய நலனைக் காட்டிலும் அடுத்தவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருப்பீர்கள்.


ஒரு பாடத்தையோ அல்லது ஒரு பயிற்ச்சியோ மேற்கொள்ளும் போது அதில் ஆழமாக சென்று அதில் உள்ளவற்றை உள்வாங்கி உங்களுடைய திறமையை அதில் காட்டி நீங்கள் அதில் ஆசிரியராகவும் மாற வாய்ப்புண்டு.  எடுத்த காரியத்தில் சுலபமாக வெற்றியடையும் உங்களுடைய வாழ்க்கையும், வெற்றி படிக்கட்டில் பொறுமையாக ஏறும் சூழ்நிலையை உருவாக்கும்.   இரண்டாம் எண்ணில் பிறந்த நீங்கள்  மற்றவர்களை காட்டிலும் தனித்துவமாக இருப்பீர்கள் உதாரணத்திற்கு 10 பேர் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் ஒரு ஆளாக செய்து முடிப்பீர்கள்.  வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு தோல்வியை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றி இலக்கை எளிதாக அடைவீர்கள். 


 இரண்டாம் என்னும் சந்திர பகவான் : 


 இரண்டாம் எண் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு வரும்  சந்திரன்  மனோகாரகன் என்று அழைக்கப்படும். இவர் மனதை ஆள்பவராக இருப்பார்.  அடுத்தவரின் மனதை புரிந்து கொள்வதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.  அப்படி என்றால் மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு  அவர்களுக்கு  ஆறுதல் கூறவும் அல்லது அவர்களை ஆற்றுப்படுத்தவோ உங்களால் முடியும்.  ஒருவர் வியாபாரத்தில் இறங்கும்போது அவர் லாபத்தை எண்ணி இறங்குவார்.  நீங்கள் வியாபாரத்தில் இறங்கும்போது லாபத்தை மட்டுமல்ல அதில்   நீண்ட காலத்திற்கு எப்படி வெற்றியாளராக திகழ வேண்டும் என்ற எண்ணத்தோடு இறங்குவீர்கள். 


இரண்டாம் எண் ஆதிக்கம் கொண்ட உங்கள்  கைகளில்  சரஸ்வதி குடியிருப்பார். ஓவியத்தில் மிகுந்த ஆற்றலும் அதில் மிகுந்த புலமையும் பெற்று இருப்பீர்கள். இசையில் ஆர்வம் மிக்க நீங்கள்  இசைக்கருவிகளை வாசிப்பவராகவும் இருப்பீர்கள். உங்களுடைய அறிவு மற்றவர்களுக்கு பிரயோஜனப்படும்படி தான் அமையும். உதாரணத்திற்கு இசையை நீங்கள் கற்றுக் கொண்டால் அடுத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும் . எதையெல்லாம் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்களோ அதையெல்லாம் அடுத்தவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக மாறுவீர்கள் . வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிக்கட்டையும் பார்த்து நிதானமாக பொறுமையாக எடுத்து வைப்பீர்கள் . இந்த இரண்டாமின் ஆதிக்கம் கொண்டவர்கள் மிகுந்த செல்வாக்குடன் வாழ்வார்கள் .


நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர்கள் !!!


இயல் இசை நாடகம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குவீர்கள். பெரும்பாலான ஹாலிவுட் நடிகர்கள் இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள் ஆகவே இருக்கிறார்கள் . அவர்களுடைய நடிப்பு மிகுந்த பாராட்டுக்குரியதாகவே இருக்கிறது குறிப்பாக ஆஸ்கர் வாங்கும்  நடிகர்களின் பட்டியலில் இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். கவிதையில் புலமை வாய்ந்தவர் நீங்கள் .   நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் மற்றவர்களின் மனதில் பசுமரத்தணியாய் பதியும் . இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் . உலகத் தரம் வாய்ந்த பாடல்களை பாடுவதில் நீங்கள் கெட்டிக்காரர்களாக இருப்பீர்கள் . ராகம் உங்கள் நாக்கில் நாட்டியமாடு .


இரண்டாம் என்னும் மகாத்மா காந்தி :


நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தது அக்டோபர் இரண்டில் தான் . வன்முறையை கையில் எடுக்காமல் அகிம்சையை பின்பற்றி  நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததில்  மகாத்மாவுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு . நாம் ஏன் அவரை தேச தந்தை என்று அழைக்கிறோம் ?  மென்மையான மனதிற்கு சொந்தக்காரரா இருக்கும் மகாத்மாவிற்கு  சண்டை போடுவதில் பெரிதாக ஆர்வம் கிடையாது மாறாத அவர் ஐ.எம்.சி.யை கையில் எடுத்து அதன் மூலம் வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் .


இரண்டாம் எண்களும் தொழில்களும் :


மனோ தத்துவ நிபுணர்  இந்த இரண்டாம் எண் ஆதிக்கத்திற்குரிய தொழில்களை கொண்டவர் தான் . மனதை படிப்பவர்கள் பெரும்பாலும் இந்த தேதியில் தான் பிறந்திருப்பார்கள்.  ஆகவே அடுத்தவரின் குறை நிறைகளை கேட்டு அறிந்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் விளங்குவார்கள் . கார் பக்கம் நியாயம் எது தர்மம் என்பதை நன்றாக அறிந்தவர்கள் .


வழக்கறிஞர்கள் இந்த எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்கள் . வழக்காடு மன்றங்களில்  யார் பக்கம் நியாயம் எது உண்மை என்பதை  எளிதில் கண்டறிய கூடியவர்கள்.  இந்த வழக்கறிஞர்களே பிற்காலத்தில் நீதிபதிகளாகவும் உயர்வார்கள்  மருத்துவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறப்பவர்களே . புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் . எந்த மருந்தோடு எந்த மருந்தை சேர்த்து சாப்பிட்டால்  உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் .


அரசியலில் கொடி கட்டி பறப்பவரும் நீங்கள்தான் . பேச்சாற்றல் எழுத்தாற்றல் மிக்கவர் என்பதால்  அது எளிதாகவே அரசியலுக்குள் தன்னுடைய ஒரு துருப்புச் சீட்டாக அமையும் . உங்கள் பேச்சு அடுத்தவர்களை  இருக்கும்படி இருக்கும் . மக்களை கவரும் உங்களுக்கு ஓட்டுக்கள் எளிதாக    விழும் . அரசியலில் எளிதாக வெற்றி காண்பீர்கள் .


முடிவுரை :


 இறுதியாக  இயல், இசை, நாடகம், மருத்துவம் , தொலைத் தொடர்பு  வழக்காடு மன்றம் , தொழில்நுட்ப பிரிவு , அயல்நாட்டில் வேலை,  போன்றவைகள் உங்களுக்கு சர்வ சாதாரணமாக  கிடைக்கக் கூடியவை  என்பதை புரிந்து கொள்வீர்கள் .  அனைத்துமே சுலபமாக கிடைக்கக்கூடியது என்பதால்  உங்களுக்கு வாழ்க்கையில் எல்லாமே வெற்றி தான் . வணக்கம் வாழ்த்துக்கள் !!!