ஏலக்காய் வாசனைக்காக பயன்படுத்தும் ஒரு பொருள். ஏலக்காயில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஒவ்வொரு சக்தி உண்டு. ஆம் ஏலக்காய் சாப்பிட்டால் பணம் வரும் என்பது உண்மைதான். அப்படி என்றால் தினமும் ஏலக்காய் போட்டு பாலில் குடித்தால் பணம் வரும் தானே என்று நீங்கள் என்னை கேட்கலாம். அதற்கான பதில் உலகத்தில் எந்த விஷயங்கள் நடந்தாலும் அதற்கு காரணம் அந்தந்த குறிப்பிட்ட ஜாதகரின் தசா புத்திகள் தான்.
வீட்டின் வரவேற்பு அறையில் ஏலக்காய்:
வீட்டில் அதிகப்படியான மன வசியம் ஏற்பட நீங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் ஒரு கண்ணாடி கூலையில் தண்ணீர் முழுவதுமாக நிரப்பி கொண்டு அதில் ஏலக்காய் ஒன்பது, மஞ்சள் ஒரு சிட்டிகை, மூன்று சிறிய கற்கண்டு இவற்றை வைத்து வர, வீட்டில் நிச்சயமாக தன வசியம் உண்டா? ஏலக்காய் மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. தினமும் நீங்கள் வரவேற்பு அருகில் ஏலக்காய் வைத்து வர வீட்டில் இருக்கும் துரதிஷ்டங்கள் விலகி அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
பண வசியத்தை உண்டாக்கும் ஏலக்காய்:
மூன்று ஏலக்காய், மூன்று சிறிய கற்கண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் வாயில் ஒரு ஓரத்தில் கரையும்படி வைத்து விடுங்கள். 20 நிமிடத்திற்கு மேல் உங்கள் வாயில் ஏலக்காய் இருந்தாலே போதுமானது. அதை நீங்கள் என்றும் விழுங்கலாம் அல்லது அதை கரைத்தும் விடலாம். இப்படி ஒன்பது வாரங்களுக்கு நீங்கள் செய்து வர கடன் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடுவீர்கள்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும், சவுகரியங்களும் உங்களை தேடி வரும். வீட்டில் லட்சுமி கடாக்ஷம் பெருகும். ஒருவரது வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அனைவரது வீட்டிலுமே பொருட்கள் ஆங்காங்கே சிதறி கடப்பது வழக்கம் தான். ஆனால் வீடு என்பது தூய்மையாகவும் பொருட்கள் கலைந்து இல்லாமலும் காலை, மாலை என்று இரண்டு வேளைகளிலும் வீடு முழுவதும் சுத்தம் செய்வது நல்லது. கலைந்து கிடக்கும் வீடு லட்சுமிக்கு பிடிக்காத ஒன்று.
உங்கள் வீட்டில் பணம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் தூய்மை என்பது நிச்சயமாக இருக்க வேண்டும். தூய்மை இருக்கும் வீட்டில் லட்சுமி குடியேறுவாள். அப்படி மகாலட்சுமியே வந்துவிட்டால் பிறகு என்ன நீங்கள் கோடீஸ்வரர் தானே? வீட்டை நன்றாக வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் போட்டு சுத்தம் செய்து பூஜை அறையில் மட்டுமல்லாமல் ஹால்,பெட்ரூம் போன்ற அறைகளில் மஞ்சள் தெளித்து மஞ்சள் பூசி வீட்டை மிகவும் கடாட்சமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் செய்து வந்தாலே 90% உங்கள் வீட்டில் இருக்கும் பண பிரச்சனை நீங்கிவிடும். ஏலக்காய் எடுத்துக்கொண்டு வீட்டின் பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் மூன்று ஏலக்காய் விதம் வெள்ளிக்கிழமை தோறும் காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் மூன்று மூன்று ஏலக்காயாய் நீங்கள் பூஜை அறையில் வடகிழக்கு மூலையில் வைத்து வந்தால் வீட்டில் இருந்து வந்த தரித்திரம் நீங்கி பணவரவு உண்டாகும்.
வீட்டின் நிலை வாசலில் ஏலக்காயை தொங்க விடுதல் :
12 ஏலக்காயை எடுத்துக்கொண்டு ஒரு வெள்ளை நிற துணியில், அதை கட்டி வீட்டின் நிலை வாசலில் தொங்க விட்டால் வீட்டிற்கு வரக்கூடிய துரதிர்ஷ்டங்கள் அப்படியே வாசலோடு திரும்பி சென்று விடும். குறிப்பாக வீட்டில் ஏதேனும் துஷ்ட சக்தியோ கண் திருஷ்டியோ அடுத்தவர்கள் பொறாமை படும்படியான விஷயங்கள் எது இருந்தாலும்? அந்த வீட்டில் நிலை வாசலில் இருக்கக்கூடிய ஏலக்காய் அதை அப்படியே திருப்பி அனுப்பும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்லோரும் ஏதேனும் ஒரு வகையில் பணக்கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்போம்.
அப்படி பணக்கஷ்டம் நம்மை அண்டாமல் இருக்கும் பட்சத்தில், நீங்கள் தாராளமாக ஏலக்காய் 100 கிராம் எடுத்து மற்றவர்களுக்கு அன்னதானமாக கொடுக்கலாம். ஏலக்காய் எப்படி அன்னதானம் கொடுக்க வேண்டும் என்றால் ஏலக்காய் பால் எடுத்து நீங்கள் வைத்துக் கொண்டு, அதை கோவிலில் வருபவர்கள், போவர்களுக்கு நீங்கள் பால் அன்னதானமாக கொடுக்கலாம். வீட்டின் நிலை வாசலில் 12 ஏலக்காய் வைத்து கட்டும் முறையை கூறினேன். அதேபோன்று வீட்டில் யாருக்கேனும் நோய்வாய் பட்டு இருந்தால், அவர்களுக்கு 9 ஏலக்காய் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி அதை வீட்டின் நிலை வாசலில் வைத்து வந்தால் நோய் நொடி உடனே குணமாகும்.
இப்படி ஏலக்காய்க்கு பண வசியம் மட்டுமல்லாமல் நோய் நொடியை விரட்டக்கூடிய சக்தியும் உண்டு. இதை வாசிக்கும் வாசகர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், ஏலக்காயை நான் வாயில் வைத்து நீங்கள் சொன்னபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஆனால், எனக்கு பணம் கைக்கு வருவதற்கு தாமதமாக இருக்கிறது என்று எண்ணினால் உங்களுக்கான பதிவு என்னவென்றால், நீங்கள் ஏலக்காய் வைத்த மறுநொடியே மறுநாளே அந்த வாரமே உங்களுக்கு பணம் வரும் என்பது அவசியமல்ல. அதைவிடுத்து உங்களுடைய செலவுகள் கட்டுக்குள் வந்து சேமிப்பு உயர்ந்து பணவரவையும், அதிகப்படுத்தும் என்பது தான் ஏலக்காயின் ரகசியம்.