அன்பார்ந்த வாசகர்களே, இன்று பெரும்பாலான மக்களுக்கு அன்றாட பண தேவை அதிகமாக உள்ளது.  அன்புக்கு அடுத்தபடியாக இந்த உலகை ஆள்வது பணம் என்று கூட சொல்லலாம்.  யாரிடமாவது உங்களுடைய லட்சியம் என்ன என்று கேட்டார்.  நூற்றில் 20% பேர் அன்பாக வாழ வேண்டும், நல்லவனாக இருக்க வேண்டும்,  யாருக்கும் எந்த தீங்கும் செய்யக்கூடாது,  இருக்கின்ற வரை நல்லது மட்டுமே செய்துவிட்டு இறந்து விட வேண்டும் என்று சொல்லுவார்கள். மீதி 80 சதவீதம் பேர்  பண தேவைகளின் அடிப்படையில் அவரவர் தேவையை கூறுவார்கள்.  உதாரணத்திற்கு வீடு கட்ட வேண்டும், வாகனம் வாங்க வேண்டும், கௌரவமாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட பணத்தை  நாம் எப்படி பெறுவது?


கோடீஸ்வர ஜாதகமா? ஏழை ஜாதகமா?


ஒருவருடைய பிறந்த ஜாதகமே கூறிவிடும். அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள் என்று?  உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தில் பதினொன்றாம் வீட்டில் நல்ல கிரகங்கள் இருந்து, அந்த கிரகங்களின் திசை  நடக்குமாயின், அவர்கள் நிச்சயமாக நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு இறப்பார்கள்.  அப்படி இல்லை என்றால் ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாம் பாவாதிபதி, இரண்டாம் பாவத்தில் அமர்ந்த கிரகம் நல்ல நிலைமையில் இருக்குமாயின் அவர்களாகவே  பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயர்வார்கள். 


இது எதுவுமே சரியாக அமையாதவர்கள், நடுத்தரமான வாழ்க்கை வாழ்ந்து விட்டு இறந்து போவார்கள்.  ஐந்தாம் பாவம் சிறப்பாக இருப்பவர்களுக்கு  பூர்விகத்தின் மூலமாக தந்தையார், தாயாரின் சொத்துக்கள் மூலமாக அவருடைய வாழ்க்கை ஓரளவுக்கு நடத்தி விட்டு செல்வார்கள். நான்காம் பாவம் மிக வலிமையாக இருக்கும் ஜாதகர்கள்  வீடு கட்டி அதை வாடகை விடுவதன் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில் ஓரளவுக்கு நகர்த்தி செல்ல வாய்ப்பு உண்டு.  மூன்றாம் பாவம் வலிமையாக இருக்கும் பட்சத்தில், பேச்சுத் தொழில் மூலமாக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓரளவுக்கு வாழ்ந்து விட்டு செல்வார்கள். இப்படியாக ஜாதகத்தில் அவரவரின் பாவ  பலனுக்கு ஏற்ப  பண தேவை பூர்த்தியாவதன் பலம் அமையும்.


நெல்லிக்காய் மரமும்,  லட்சுமி  கடாக்ஷமும் :


சில கனிகள் மகாலட்சுமியின் யோகத்தைக் கொண்டதாக அமைகிறது. சாஸ்திரத்தில் மாங்கனிக்கு அப்படி ஒரு கடாக்ஷம் உள்ளது.  மாமரத்தை லட்சுமியின் அம்சமாக பார்க்கிறார்கள் முனிவர்கள்.  அதே போல தான் நெல்லிக்காய் மரமும், கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாக சிறிய நெல்லிக்காய் மரம் வீட்டில் வளரும்.  நெல்லிக்காய் மரங்களில்  லட்சுமி கடாக்ஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக சிறிய செடியாக வாங்கி வைத்து  வீட்டில்  நெல்லிக்காய் மரம் வளர்ப்பு வந்தால்  மரம் வளர, வளர வீட்டின் செல்வமும் வளரும் என்று சொல்லப்படுகிறது.  நெல்லிக்காய் மரம் வளர்ப்பதற்கே ஒரு தனி யோகம் வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.  நெல்லிக்காய் மரம் வளர்த்தால் என்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்.


நெல்லிக்காய்  மரத்தை வளர்ப்பதனால் உள்ள  பயன்கள் :



  • நெல்லிக்காய் மரம் வளர்ப்பது மூலம் வீட்டின்  செல்வத்தை பெருக்க முடியும்.

  • வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள் விலகும்.

  • கண் திருஷ்டி  அகலும்.

  • மலை போல் இருந்த கடல்கள் கடுகளவு குறையும்.

  • வீட்டை சுற்றிலும் ஒரு தெய்வீக தன்மை உண்டாகும்.

  • முறையாக நெல்லிக்காய் மரத்தை எந்த ஒரு  தூங்கும் இல்லாமல்  வளரும் போது  அது உங்களுக்கு நன்மையை செய்யும்.

  • துர்தேவதைகள் வீட்டை விட்டு செல்வார்கள்.

  • ஏழு தலைமுறைக்கும், அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்துக்கள் சேரும்.

  • சமுதாயத்தில் மதிப்பு மரியாதை  கூடும்.

  • நீங்கள் சாதிக்கும் நினைக்கும்  விஷயங்கள் சாதகமாக முடியும்.


நீங்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்கலாம். அப்படியென்றால் நெல்லிக்காய் மரம் வைத்திருக்கிறவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்கள் அவர்கள் தானே.  நிச்சயமாக இது அப்படி வேலை செய்யாது.  நெல்லிக்காய் மரம் வேலை உங்களுடைய மூதாதையர் உங்கள் வீட்டில் வைத்திருந்தால் அவருக்கு அது நன்மை அளித்திருக்குமே தவிர, அது உங்களுக்கு அளிப்பதற்கு வாய்ப்பில்லை.  மாறாக அவர்கள் விட்டு சென்ற சொத்துக்கள் நீங்கள் அனுபவிக்க வாய்ப்பு உண்டு.  இப்படி இருக்க நெல்லிக்காய் மரத்தை யார் தான் வளர்க்க வேண்டும்.  நெல்லிக்காய் மரத்தை அனைவருமே வளர்க்கலாம்.  பணம் மட்டும் செல்வமில்லை.  அப்படி இருக்க  நீங்கள் ஆசைப்பட்ட செல்வங்களை உங்களுக்கு அள்ளித் தரும் நெல்லிக்காய் மரம்.


நெல்லிக்காயின் சாறு என்ன செய்யும் ?


ஒருவேளை உங்களால் நெல்லிக்காய் மரம் வீட்டில் வளர்க்க முடியாமல் போகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், நெல்லிக்காயின் சாறை நீங்கள் பருகி வந்தால், ஏற்கனவே பணம் சம்பந்தமான பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால் அது அகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.  அல்லது தொழில் ரீதியாக பணம் வரும் வழிகள் ரீதியாக உங்களுக்கு ஏதேனும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.  ஆக மொத்தத்தில் நான் கூற வரும் கருத்து நெல்லிக்காய் மரம் நெல்லிக்கனி நெல்லிக்காய் சாறு  உள்ளிட்ட அனைத்துமே லட்சுமி கடாட்சம் என்பதால் எப்படி இயலும் ஒரு வகையில் லட்சுமியை உங்கள் இல்லத்திற்கு கொண்டுவரும் என்பதை எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.