ஐப்பசி அன்னாபிஷேகம் : விழுப்புரத்தில் 50 கிலோ அன்னமும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்...

விழுப்புரம்: 50 கிலோ அன்னதாலும், காய்கறி பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கம்

Continues below advertisement
ஐப்பசி  அன்னாபிஷேகம் 

விழுப்புரம் ( Villupuram ) :

Continues below advertisement

ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்கள்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். லிங்கத் திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். "தான் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். அதனால் பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையை கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையை கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சைப் பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிட்டதாக" நம்பப்படுகிறது
 

 
ஆதிவாலீஸ்வரர் சிவன்

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ( Villupuram) ஆதிவாலீஸ்வரர் சிவன் கோயிலில் மூலவர்க்கு 50 கிலோ அன்னத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை  காண்பிக்கப்பட்டது. ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பானது.

இறைவன் சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம். பஞ்சபூதம் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்சபூதங்கள் சேர்ந்ததால் ஆகிறது. பஞ்சபூதங்களால் ஆன இந்த அன்னம் மனிதனுக்கு இன்றியமையாத உணவாக விளங்குகிறது. சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம் ஆகும். 


அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களிலும் இன்று அன்னாபிஷேகம்  நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர்  திருக்கோவிலில், மொத்தமாக 75 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டும், 200 கிலோ அன்னத்தையும்  பயன்படுத்தி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக மூலவருக்கு 50 கிலோ அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சிறப்பு தீபாரதனை  காண்பிக்கப்பட்டது.

குழந்தை பாக்கியம்

மேலும், பக்தர்கள் இந்த அன்னாபிஷேகத்தை கண்டால் மிகவும் சிறப்பானது எனவும்  இந்த அன்னத்தை வாங்கி உன்னால் நோய்நொடி நீங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்ற ஐதீகம் இருப்பதால் , இந்த அன்னாபிஷேக வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அன்னாபிஷேகம் : அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்ததாக நம்பிக்கை

அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோயில்களிலும் செய்வது வழக்கமான ஒன்று. முதலில் எப்போதும் செய்யும் வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளை உரலிலிட்டு குத்தி அரிசியாக்கி வரும் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் மூடி பலவகையான காய்கறிகளால் அலங்கரித்து, பூஜித்து பின்னர் அனைவருக்கும் அந்த அன்னத்தை பிரசாதமாக வழங்குவார்கள்

மேலும் மிகுதி அன்னத்தை நீர் நிலைகளில் சேர்ப்பித்து மீன் போன்ற ஜீவராசிகளுக்கும் அளித்து விடுவார்கள். இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அந்த பிரசாதத்தை பெரும் தம்பதியர் இணைபிரியாமல் வாழ்வாங்கு வாழ்வார்கள் என தெய்வத்தின் குரலில் மஹாசுவாமிகள் கூறுகிறார். அதனால் அன்று மாலை ஒவ்வொரு சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்துள்ளதால் இதனை தரிசிக்கும் பக்தர்கள் கோடிலிங்க தரிசன பலனை அடைகிறார்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola