Mithunam New Year Rasi Palan: விபரீத ராஜயோகம்! 2025 மிதுனத்துக்குத்தான் ஜாக்பாட்! யோகத்தை பாருங்க

Mithunam New Year Rasi Palan: மிதுன ராசிக்கு 2025ம் ஆண்டு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

Continues below advertisement

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே!

Continues below advertisement

உங்களுடைய ராசிக்கு  2025 எப்படி இருக்க போகிறது?

ரிஷபத்தில் குரு பகவான் அமர்ந்திருந்தது உங்களுக்கு அவ்வளவு சௌகரியமான வீடு அல்ல.   ஒரு ராசிக்கு 12 இல் குரு பகவான் அமர்வது சிறப்பல்ல என்றாலும், சில வகைகளில் உங்களுக்கு யோகத்தை கொடுத்திருப்பார். 

வீடு மாற்றம், இட மாற்றம், வாகனம் வாங்குதல் போன்ற பலன்களையும், அதிகப்படியான அலைச்சல்களோடு கொடுத்திருக்கலாம். மறைந்திருந்து தாக்கி வாலியை அழிப்பது போலவே, சில எதிரிகள் உங்களுக்குப் பின்பாக மறைந்திருந்து தாக்கி உங்களை அழித்திருக்க கூடும் அல்லது அழிக்க நினைக்கலாம். தெய்வ பக்தியோடு நீங்கள் இருக்கும் பட்சத்தில் அப்படிப்பட்ட நபர்களிடமிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை 12 ஆம் வீட்டிலேயே சஞ்சாரம் செய்யும் குரு பகவான்  மே-க்கு பிறகு உங்களுக்கு ராசியிலேயே வரப்போகிறார். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு ஏற்றமான காலகட்டம்.  ராசியில் குரு அமர்வது சிறப்பே ஆகும். காரணம் பத்தாம் வீட்டு அதிபதி குரு ராசியில் அமரும்போது தொழில் ரீதியான வெற்றிகளை கொண்டு வந்து கொடுப்பார்.

12ல் குரு பகவான் அமரும்போது எப்படி உங்களுக்கு செலவுகளையும், அலைச்சல்களையும் சிலருக்கு சில சிக்கல்களையும் கொண்டு வந்து சேர்ப்பது போலவே, ராசியில் வரும்போது நல்ல பெரிய மாற்றங்களை கொண்டு வருவார்.  ராகு கேது பெயர்ச்சியும் கூட உங்களுக்கு நல்ல மாற்றங்களை அதே போல தான் செவ்வாய் பெயர்ச்சியும், சனி ஏற்கனவே உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கப்போகிறார். சரி வாருங்கள் சுருக்கமாக உங்கள் ராசிக்கு என்ன நன்மை வழங்க போகிறது? என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி:

பிப்ரவரி 7ஆம் தேதி வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டை நோக்கி நகர்கிறார். அப்படியானால் ஏற்கனவே இருந்த சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபட்டு  சுமாரான பலன்களை பெறக்கூடும். முழுவதுமாக நீங்கள் பலனை பெற வேண்டும் என்றால், அதற்கு மே மாதம் தாண்டி அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு. அஷ்டம சனி தற்போது விலகி  நல்ல காலம் தான் உங்களுக்கு ஆரம்பித்திருக்கிறது.

2024 நவம்பரில் சனி வக்கிர நிவர்த்தி அடைந்ததற்கு பின்பாக எட்டாம் இடத்தில் பயணித்த சனி வக்கிர நிவர்த்தி பெற்று ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் உங்களுக்கு சில அருமையான நல்ல பலன்களை வாரி வழங்குவார்.

எதிர்பாராத தன வரவு ஏற்படுதல்,  நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளுதல், பணம் சம்பந்தமான காரியங்களில் வெற்றியை பெறுதல், வீடு மனை வாங்குவது தொடர்பாக நல்ல பலன் ஏற்படுதல் போன்றவை சர்வ சாதாரணமாக நடைபெறும். குரு பெயர்ச்சி பொறுத்தவரை  பிப்ரவரி 7ம் தேதிக்கு பிறகு மீண்டும் 12ஆம் இடத்தில் பயணிக்கும் குருவால்  சில சிக்கல்களை தான் நீங்கள் சந்திக்க நேரிடும்.  ஒரு சிலர் அவமானப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் கவலை வேண்டாம். பாதகாதிபதி என்கின்ற வகையில் அவர் உங்களுக்கு விபரீதத்திற்கு மேல் ராஜயோகத்தை கூட கொண்டு வரலாம். அதாவது மற்றவர்கள் உங்கள் மீது பழி போட போக  நீங்கள் நேர்மையானவர் என்று தெரிய வர  இறுதியில் உங்களுடைய புகழ் அதிலேயே அடங்கி இருக்கலாம்.   எதிரிகள் உங்களைக் கண்டு அந்த சமயத்தில்   நடுங்கலாம்.

 ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு குரு பெயர்ச்சி:

ராசிக்கு உள்ளே குரு வந்துவிட்டார் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று சிலர் விமர்சிப்பது உண்டு. ஆனால் பலமுறை மிதுனத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் போது நான் பார்த்திருக்கிறேன்.  திருமண காரியங்களை நடத்தி வைத்தல், வீட்டில் மிகப்பெரிய சுப காரிய நிகழ்வுகளை நடத்துதல், கஷ்டமான சங்கடங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக மாறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.   எதிர்காலம் எப்படி அமையும் என்று காத்திருக்கும் பலருக்கு அற்புதமான எதிர்காலத்தை குரு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மிதுனத்தில் இருக்கும் குரு ஐந்தாம் இடத்தை பார்ப்பதால்  காதல் திருமணம் கைகூடும்.

வேண்டியவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நடைபெறுதல்.   புத்திர பாக்கியம் சிறப்பாக அமைந்தது. எவ்வளவு கடன்கள் இருந்தாலும் அது கடுகளவு சிறியதாக மாறுதல்.   காரணம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் கடன் குறையும் அல்லது இல்லாமல் போகும்.  செல்கின்ற இடங்களையெல்லாம் சிறப்பை சேர்ப்பவர் நீங்கள். எந்த ஒரு காரியத்திற்கும் உங்களை  முன் நின்று வைத்து அதை வெற்றிகரமாக   செயல்படுத்துவார்கள்.

சமுதாயத்தில் உங்களுக்கு நல்ல மரியாதையும் அந்தஸ்து உயரும்.   வீட்டில் சிறுசிறு சண்டைகள் ஏற்பட்டால் அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்  அப்படியே விட்டுவிடுவது நல்லது.   தொழில் ஸ்தான அதிபதி குரு ராசிக்கு வந்து அமரும்போது  நல்ல பல ஏற்றமான முன்னேற்றங்களை தான் கொடுக்கப் போகிறார் குறிப்பாக தொழிலில்.   வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.   அற்புதமான எதிர்காலம் உருவாகும்.

ராகு கேது பெயர்ச்சி 2025:

ராகுவும் புதனும் ஒரு வகையில்  ஒரே மாதிரியாகத்தான் செயல்படுவார்கள். நாம் விரும்பியதை ராகு எப்படியாவது அடைய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவார். அப்படிப்பட்ட முயற்சி ஸ்தானாதிபதி தான் கால புருஷனுக்கு புதனும் ஆவார். அடுத்தவரிடம் தொடர்பு கொள்ளும் போது  நீங்கள் எப்படி பேசி அந்த காரியத்தை சாதிக்கிறீர்கள்? என்பது புதனின் வலிமையை பொறுத்துதான் அமையும்.

ஒருவர் பேசிய காரியத்தை சாதித்தால் அவர் புதன் ஆதிக்கம் உடையவராக போற்றப்படுவார். இயல்பாகவே   மிதுனத்திற்கு புதனின் ஆசிர்வாதம் உண்டு. தற்போது ராகுவும் ஒன்பதாம் இடத்தில்  பெயர்ச்சியாவது  பெரிய யோகத்தை கொண்டு வரும் பாம்புகள் எப்பொழுதும் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். அப்படி ஒரு இடம்தான் மூன்றும், ஒன்பதும்.

ஒன்பதாம் இடம் என்பது தந்தையார் ஸ்தானம் அல்லது உபதேச ஸ்தானம் என்பதால் தந்தையாரின் உடல் நிலையில் சேர்த்து அக்கறை தேவை. பூர்வீகத்தை விட்டு வெளிநாட்டிற்கு அல்லது வெளியூருக்கோ சென்று வசிக்க சிலருக்கு நேரிடலாம்.  பொருளை வாங்கி விற்கும் தொழில் செய்பவர்களுக்கு இது அற்புதமான காலகட்டம். குறிப்பாக அயல்நாட்டு வியாபாரிகளுக்கும்  உள்நாட்டில் இருந்து அயல் நாட்டிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கும் இது சிறப்பான பொற்காலம்.  ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் உங்களின் முயற்சிகளை தொடர் வெற்றியாக மாற்றலாம். 

செவ்வாய் உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறார்?

இரண்டாம் இடத்தில் செவ்வாய் நீச்சத்தில் வருடத்தின்  5 மாதங்கள் பயணிக்கும் காலகட்டத்தில்  பணத்தை சம்பாதிப்பதில் சிக்கல்களை கொடுத்தாலும், விபரீத ராஜயோக அடிப்படையில் செவ்வாய் நன்மையை செய்வார்.  காரணம் மிதுனத்திற்கு எதிரிகளை உருவாக்கக்கூடிய அல்லது நோய்களை உருவாக்கக்கூடிய அதிபதியான செவ்வாய்  இரண்டில் வந்து நீச்சமாவதால் நீங்கள் உண்ணுகின்ற உணவு மருந்தாக மாறும்.

நீங்கள் பேசுகின்ற பேச்சாற்றல் மூலம் எதிரிகள் ஒழிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும். இப்படி உங்களிடத்திலே பெரிய திறமைகள் வெளிப்படும் காலகட்டம் தான் செவ்வாய் கடகத்தில் இருப்பது. லாபாதிபதி இரண்டாம் இடத்தில் இருப்பது  நன்மையை கொடுத்தாலும், அவர் நீர்ச்சகத்தில் இருப்பது  முதலீடுகளை தற்போது செய்ய வேண்டாம்  வருடத்தின் பிற்பாடு செய்யலாம் என்று  எங்களுக்கு அறிவுரை கூற தோன்றுகிறது.

பொதுவாக மிதுனத்தை பொறுத்தவரை இந்த வருடம் ஜாக்பாட் தான்.   கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு,  நல்லது ஒரு இடத்தில் தற்போது அமர்வதற்கான காலகட்டம்.   வெரிகுரு சென்று விட்டாலே வாழ்க்கையில் பாதி பிரச்சனை முடிவுக்கு வரும்  அப்படியான ஜென்ம குருவை வரவேற்க நீங்கள் தயாராகுங்கள் வெற்றியை காணுங்கள்...

Continues below advertisement
Sponsored Links by Taboola