அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே!
ஏழரை சனியின் பிடியில் இருக்கிறோம்.. என்ன நடக்கப் போகிறது என்று ஏக்கத்தோடு இருக்கும் உங்களுக்கு ஆறாம் இடத்து குருவின் சஞ்சாரம், இரண்டாம் இடத்தில் ராகுவின் சஞ்சாரமும் சிறப்பான பலன்களை கொண்டு வரப் போகிறது. சனிக்கு பிடித்த புதன் வீட்டில் குரு பகவான் இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகப்பெரிய யோகம் கொண்டு வருவார்.
ஆரம்பத்தில் அமரும் குரு எப்படி யோகத்தை கொண்டு வருவார் என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் ராசிக்கு விரயத்திற்கு அதிபதி ஆறில் செல்லும்போது விரயத்தை கட்டுப்படுத்தி பணவரவை உண்டாக்குவார். உங்களிடம் இருந்து எது போகிறதோ? அது மீண்டும் வரும். எந்த பொருளும் பணமும் கரைவதற்கான வாய்ப்புகள் இல்லை. பொன் பொருள் ஆபரண சேர்க்கை உண்டாக்கும்.
குரு பெயர்ச்சி:
பிப்ரவரி 7ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்து நான்காம் வீட்டை நோக்கி பயணிக்கிறார். சிறு சிறு அலைச்சல்கள் இருந்தாலும் அதன் மூலம் ஆதாயம் உண்டு. மகரத்தை பொறுத்தவரை அவர் மேஷத்திற்கு பயணிப்பதால் மற்றவர்களை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு ஏதுவான கிரகச் சூழ்நிலையை நான்காம் இடத்து குரு உருவாக்கி தருவார்.
பிறகு பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் புத்திர பாக்கியத்திற்கு தடை இருக்காது. உங்களுக்கு அழகான ஒரு ஒரு குழந்தை பிறக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகவில்லை என்று இருப்பவர்களுக்கு கூட திருமண காரியங்கள் விரைவில் நடைபெறும். புகழை உருவாக்கித் தருவார். பணம் சம்பந்தமான சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். கடன்கள் கரைந்து சேமிப்புகள் உயரும் காலகட்டம். காரணம் ஐந்தாம் வீடு என்பது ஆறாம் வீட்டிற்கு வரைய ஸ்தானம் என்பதால் இருக்கின்ற கடன் எங்கே சென்றது என்று தெரியாத அளவிற்கு கடன் கரையும்.
ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் குரு:
ஒரு காலகட்டத்தில் ஆறாம் இடத்து குருவை கண்டு பயப்படாத ராசிகளே இல்லாமல் இருக்கலாம். ஆனால் மகரத்தை பொறுத்தவரை 12ஆம் அதிபதி ஆறாம் வீட்டிற்கு செல்வது, பொருளாதார முன்னேற்றத்தையும் எதிரிகள் அழிவதையும், நோய்கள் நீங்குவதையும் காட்டும். நீண்ட தூர பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டும். தூர தேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம். பத்திரப்பதிவு, நிலம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
மறைமுக எதிரிகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். அவர்கள் உங்களை எதுவும் செய்து விட முடியாது. மூன்றாம் அதிபதி ஆறாம் வீட்டிற்கு செல்வதால், வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். ஆறாம் இடத்துக்கும் குரு உங்கள் இரண்டாம் இடத்தை பார்ப்பதால் நல்ல சம்பாத்தியத்திற்கான வழி வகை பிறக்கும். ராசிக்கு பத்தாம் இடத்தை பார்வையிடுவதால் புது தொழில் மேலும் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இரண்டாம் இடத்தில் இருக்கும் ராகு சனியின் வீட்டில் இருப்பதால் அவரை கட்டுப்படுத்த உங்களுக்கு நன்றாகத் தெரியும். பேச்சாற்றலும் சொல் வன்மையும் ஏற்படும். வாருங்கள் சுருக்கமாக உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
செவ்வாயின் பெயர்ச்சி:
ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்து செவ்வாய் வருடத்தின் பிற்பகுதியில் எட்டாம் வீட்டிற்கு செல்கிறார். லாபத்தை கொடுக்க கூடிய செவ்வாய் எங்கே இருந்தாலும் அவர் லாபத்தை மட்டும் தான் தருவார். இப்படியான சூழ்நிலையில் எட்டாம் வீடு என்பது, இப்படியான சூழ்நிலையில் எட்டாம் இடம் என்பது அடுத்தவர் பணத்தை குறிக்கும். உங்கள் லாவாதிபதி அடுத்தவர் பணத்தின் மீது இருந்தால் நிச்சயமாக வியாபாரத்திலோ, தொழிலோ நல்ல லாபம் ஏற்பட்டு மிகப்பெரிய உயரத்தை அடைவீர்கள். வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்று இருக்கும் அனைத்து மகர ராசி அன்பர்களுக்கும் 2025 தான் ஏற்றமான காலகட்டம். செவ்வாயின் பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய சாதனைகளையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.