அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே, ரிஷபத்தில் பிறந்தவர் தான் நம் கிருஷ்ணர். ரோகினி நட்சத்திரத்தில் அவதரித்து  பூலோக மக்களை காத்ததோடு நமக்கு கண்ணனாக கேட்ட வரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  அவர் பிறந்தது ரிஷபம் என்பதால் அவருக்கு பிடித்தது மார்கழி. "மலர்களில் நான் மல்லிகை  ...மாதங்களில் நான் மார்கழி" என்கிறார் அவர். வேண்டிய வரங்களை இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் அருமையான மாதம்.


பொறுமை வேண்டும்:


நீங்கள் வெள்ளிக்கிழமை தோறும்  மகாலட்சுமிக்கு  ஒரு பொழுது எனும்  விரதம் இருந்து  மனதார வழிபட்டால் கேட்ட செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும். வீட்டில் நிம்மதி இல்லை, எல்லாவிதமான பரிகாரங்களையும் செய்து விட்டேன்  என்று ஏக்கத்தோடு இருக்கும் ஒரு சிலருக்கு, ஜனவரி முடியும் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து 12 ஆம் வீட்டை நோக்கி போவதால்,  சிலருக்கு வீண் அலைச்சல், மன உளைச்சல்,  காரிய தடை,  பண விரயம்  போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு.


அதேபோல் நீங்கள் இருக்கும் பதவிகளில் இருந்து கூட சில ஆபத்துகள் நேரிடலாம். கவலை வேண்டாம்.  உங்களுக்கு மார்கழி மாதத்தில் இருந்து சுமாரான பலன்கள் ஆரம்பமாகி ஜனவரிக்குப் பிறகு சூப்பரான பலன்கள் நடைபெறும். நான் வெறும் வார்த்தைக்கு மட்டும் உங்களுக்கு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு செல்லாமல்,  உண்மையாக என்ன நடக்கிறது? என்பதை கூறிவிட்டு அதற்கான பரிகாரங்களையும் சொல்வது என் இயல்பு.

பிப்ரவரி வரை அமைதி தேவை:


நீங்கள் மகாலட்சுமி வழிபாடு செய்தால் முன்னேற்றமான வாழ்க்கை பெறலாம். வீட்டில் சுபகாரியங்கள் இருந்தால் சற்று தள்ளி போடுங்கள். பிப்ரவரிக்கு மேல் அனைத்தும் சுமூகமாக முடியும். உங்கள் பிள்ளைகளுக்கு சுப காரியம் செய்ய வேண்டுமென்றால் செய்யலாம். காரணம் உங்களுக்கு விரயம் ஏற்பட்டு அவர்களுக்கு சுப காரியம் நடைபெறும். ஆனால், ரிஷப ராசியான உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பிப்ரவரி வரை கடந்தாக வேண்டும்.


சுக்கிரன் உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் டிசம்பர் வரை அமர்ந்திருக்க புதனும் உங்களுக்கு நல்ல வீடுகளில் தான் பயணிக்கிறார். மூன்றாம் வீட்டில் பனிரெண்டாம் அதிபதி நீச்சமாக இருப்பது நல்லது ஒரு கட்டத்தில் நீங்கள் செய்யும் செலவு கட்டுக்குள் கொண்டு வரப்படும். எதுவரை உங்களை சூழ்நிலை அழைக்கிறதோ? அதுவரை  அமைதியாக பயபக்தியுடன், கடத்துங்கள் நன்மை நடைபெறும்.  வாகனம் விற்பது,  வீட்டை விற்பது தொடர்பான ஆலோசனைகள் நல்ல பலன்களை கொண்டு வரும். அதற்கென்று வாகனத்தை விற்க நான் சொல்லவில்லை. அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால் நல்ல லாபம் ஏற்படலாம். 

வாழ்க்கைத் துணையிடம் கவனம் தேவை:


வீட்டை புதுப்பித்தல், பழைய வீடு கொடுத்து புது வீடு வாங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம்  நீங்கள் ஒரு விலைக்கு வாகனத்தை விற்க போனால் அது ஒரு விலைக்குத்தான் போகும்..  நீங்கள் ஒரு விலைக்கு வீட்டை விற்க போனால், அது ஒரு விலைக்குத்தான் போகும்.  எனவே  எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். குறிப்பாக ஏழாம் அதிபதி மூன்றாம் வீட்டில்  இருப்பதால்  வாழ்க்கை துணை இடம் பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். என்ன பேசுகிறோம் எப்படி பேசுகிறோம் என்று பார்த்து பேசுவது நல்லது.  நீங்கள் நன்மைக்காக ஒரு காரியம் சொல்லப் போய் அது உங்கள் வாழ்க்கை துணைக்கு வேறு விதமாக எடுத்துக் கொண்டு சண்டைகள் வரலாம்.  பொதுவாக கோச்சாரத்தில் ரசிக்க ஏழாம் அதிபதி   நீச்சமானால், ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகளை கொண்டு வருவார்.  கவலை வேண்டாம். சூரியன்  அஷ்டமஸ்தானத்தில் அமர்ந்தாலும்  உங்களுக்கு எதிரிகளை வெல்லக் கூடிய சக்தியை கொடுப்பார்.