அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே, ஏற்கனவே குரு பகவான் ஏழாம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் புகழோடு வாழ்க்கை நகரும் சூழ்நிலை ஏற்படலாம். சிலருக்கு ஏற்கனவே நடக்கின்ற சிக்கல்களில் இருந்து தீர்வு ஏற்படாமல் குழப்பத்தில் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மூன்றில் சூரியன் வந்து விட்டால், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சூரியனுக்கு பிடித்தமான வீடுகளில் மூன்றாம் வீடு தனி சிறப்பு வாய்ந்தது. லாபத்திற்கு அதிபதி சூரியன் மார்கழியில் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.
பிரச்சினைகளை கையாளும் சக்தி:
வாய்விட்டு சொல்ல முடியாத பிரச்சனைகளை கூட எளிதில் நீங்கள் கையாளும் சக்தி கிடைக்கும். சூரியன் மூல நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யும் காலத்தில் எப்படி செலவாகிறது? என்ற ஞானம் பிறக்கும். கையில் காசு இருக்கிறது. எந்த வகையில் செலவாகிறது? என்ற எண்ணம் ஏற்படும் அல்லவா? அந்த எண்ணம் தற்போது உங்களுக்கு மார்கழி ஆரம்பத்தில் தோன்றலாம். திடீரென்று பிராயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். அது திட்டமிடாத பிரயாணங்களாக இருக்கலாம். அதே போன்று, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று விட்டு சரியான உறக்கம் வரவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கூற வேண்டாம். இருக்கின்ற இடத்தில் நிம்மதியாக இருக்கவும்.
சாதிக்க நினைத்ததை சாதிப்பீர்கள்:
பூராட நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் போது திடீர் அதிர்ஷ்டங்களும் பண வரவும் ஏற்படும். மேலும், ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் லாப அதிபதி செல்வதால் பிரச்சனைகள் என்று வந்துவிட்டால், உங்களை முன்னிலைப்படுத்தி உங்களிடம் ஆலோசனைகளைப் பெற்று பிரதானமான உங்களுடைய வழிகாட்டுதலின்படி அடுத்தவர்கள் நடந்து கொள்வார்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். அடுத்ததாக, உத்திராட நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்கும் போது எதிர்பாராத காரியங்களில் வெற்றி உண்டாகும். குறிப்பாக நீங்கள் எதை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை சாதிக்க வாய்ப்புகள் கிட்டும்.
பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டு மன உளைச்சல் ஆகலாம். ஆனால், அதையும் நீங்கள் சமாளிக்க வேண்டிய சக்தி ஏற்படும். இறுதியில் வாழ்க்கை வெற்றியை நோக்கி பயணிக்கும். மார்கழியை பொறுத்தவரை எப்படிப்பட்ட சிக்கல்களான காரியங்களை கூட நீங்கள் எளிதில் வென்று முடிக்கலாம். நல்லபடியான காரியங்களில் சிறந்து விளங்க வாய்ப்புண்டு. தெய்வ நம்பிக்கை உண்டாகும். விழாவில் நாயகனாக நீங்கள் செயல்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். நல்ல பெரிய புகழ் உள்ள செயல்களை செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பட்டம் பதவிகள் தேடி வரும்.