மேலும் அறிய

எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது.

விழுப்புரம்  : விழுப்புரம் மாவட்டத்தில் உரக் கடத்தலைத் தடுக்கவும், விவசாயிகளுக்குத் தங்கு தடையின்றி சரியான விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் நெல், மக்காச்சோளம், மணிலா, உளுந்து, கரும்பு மற்றும் தென்னை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 6153 மெ.டன், டிஏபி 1731 மெ.டன், பொட்டாஷ் 1655 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 8065 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1210 மெ.டன் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் திடீராய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. மேலும், இது தொடர்பான ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும். உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. உர மூட்டையில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விவரப் பலகையினை விவசாயிகளின் பார்வையில் தெரியும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு உர இருப்பு விவரத்தினை பராமரித்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
 
மேலும், மாவட்டத்தில் உர ஆய்வாளர்கள் திடீராய்வு மேற்கொள்ளும்போது உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டம் 1955 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என சீனிவாசன், வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

எச்சரிக்கை..!
எச்சரிக்கை..! "விதிமீறலில் ஈடுபட்டால் உரிமம் ரத்து" உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
"விஜய் சார்.. வெரி ராங் சார்!" - ஐந்து ஏக்கர் வாக்குறுதியை கையில் எடுத்து மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget