கோடை மழையின்மையால் ஏலக்காய் விவசாயம் பாதிப்பு - ஏலக்காய் விலை இவ்வளவு குறைந்ததா?

ஏப்ரல் மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிட்டால் ஏலக்காய் மகசூல் பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. தற்போது சராசரி விலையில் கிலோவிற்கு ரூ.700 வரை குறைந்துள்ளது.

Continues below advertisement

கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Continues below advertisement


இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிட்டால் ஏலக்காய் மகசூல் பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. தற்போது சராசரி விலையில் கிலோவிற்கு ரூ.700 வரை குறைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் இந்திய ஏலக்காய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏலக்காயின்  நிறம், குணம்,  அளவு போன்றவற்றில் உயர்ந்தது. இருந்த போதும் ஏல விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் உள்ளன.


கட்டுபடியான விலை கிடைக்காதது, நோய் தாக்குதல், மழை பெய்யாமல் வறட்சியால் உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர் கூலி, வேளாண் இடு பொருள்கள் விலையேற்றம், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு என பிரச்னைகள் அதிகமாக உள்ளது.

கடந்தாண்டு முதல் தற்போது வரை சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. திடீர் மழை, மிக அதிக மழை, தொடர்ந்து அதிக வெயில் என பருவம் மாறி மாறி சீதோஷ்ண நிலை நிலவியது. கடந்த சில மாதங்களாக உச்சபட்ச வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. செடிகளை காப்பாற்ற தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மார்ச், ஏப்ரலில் கோடை மழை கிடைக்கும். தற்போது தை பொங்கலுக்கு பின் இதுவரை போதுமான மழை இல்லை. மழை இல்லாவிட்டால் ஏற்கெனவே மதிப்பீடுகள் செய்தபடி 60 சதவீத மகசூல் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விவசாயிகள்.

இந்நிலையில் கடந்தாண்டு ஜீன் மாதத்தில் சராசரி விலை கிலோவிற்கு ரூ.3200 வரை அதிகபட்சமாக கிடைத்தது. பின் படிப்படியாக இறங்கி தற்போது சராசரி விலை ரூ.2500க்கு வந்துள்ளது . இது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.


ஏலக்காய் சாகுபடி  குறித்து விவசாயிகள் கூறுகையில்,  கோடை மழை கிடைத்தால் ஏல விவசாயம் தப்பிக்கும். இல்லையென்றால் சிரமம். கிணறுகளில் தண்ணீர் உள்ள தோட்டங்களுக்கு பிரச்னை இல்லை. தண்ணீர் இல்லாத தோட்டங்களுக்கு மழை இருந்தால் மட்டுமே ஏலக்காய் விவசாயம் தப்பிக்கும். இந்த நிலை நீடித்தால் 50 முதல் 60 சதவீத மகசூல் பாதிப்பு ஏற்படும் என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola