கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  தலைமையில் வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கூட்டு வன மேலாண்மை குழு மற்றும் பசுமை குழுக்கூட்டம் நடைபெற்றது. 




     


இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகள் குறித்தும், கூட்டு வன மேலாண்மை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பாக நடப்பாண்டில் எவ்வளவு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும், அனைத்துதுறை வாரியாக உற்பத்தி செய்யப்படும் நாற்றங்கால் விவரங்களை தெரிவித்தல் குறித்தும், மாவட்ட ஆட்சித் தலைவர்  தணிக்கை செய்வதற்கு ஏதுவாக அனைத்து துறைவாரியாக நாற்றங்கால் உற்பத்தி செய்யப்படும் விபரங்கள் வழங்குவது குறித்தும்,


 




 


மேலும், கரூர் மாவட்டத்தில் மரகத பூஞ்சோலை திட்டத்தின் சார்பில் மூன்று பூஞ்சோலைகள் உள்ளன அதனை அனைத்து துறைகளும் இணைந்து பூஞ்சோலைகளை மேம்படுத்துவது தொடர்பாக பசுமை குழு கூட்டத்தில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

     


 




 


இக்குழுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணி ஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்), மாவட்ட வன அலுவலர் சரவணன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராசா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்) சோபா (குளித்தலை) இணை இயக்குநர் வேளாண்மை சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.