பனியிலும் அறுவடைப்பணி... அம்மாப்பேட்டை விவசாயிகள் மும்முரம்

காலை மற்றும் இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் நெல் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் சம்பா சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம். கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய 3.20 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதம் சுமார் 3.19 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது. 

தற்போது சம்பா சாகுபடிக்காக அறுவடை பணிகள் மும்ழுரமாக நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பெய்த மழையால் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டன. மேலும் கடும் பனிப்பொழிவு இருப்பதால் நெல்கள் அனைத்தும் அறுவடை செய்ய முடியாத நிலையில் சாய்ந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெல் முளைக்க ஆரம்பித்து விடும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளது. இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டம் 8 நம்பர் கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் நெல்பழம் மற்றும் புகையான் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

காலை மற்றும் இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் நெல் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மருவத்தூர் பகுதியில் சம்பா சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக நாமக்கல், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 வரை வசூலிக்கப்படுகிறது. அறுவடை இயந்திரம் பற்றாக்குறை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.  

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நன்கு முற்றிய நெல் கதிர்களை அறுவடை செய்து உலர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இல்லாவிட்டால் பனியால் நெல் பாதிக்கப்படும். அறுவடை இயந்திரம் வௌி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இறுவடை செய்து வருகிறோம். இன்னும் காலம் தாழ்த்திலாம் அறுவடை செய்வதில் பிரச்சனை ஏற்படும். இந்த மாத இறுதியில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் தற்போது அறுவடையை தொடங்கியுள்ளோம். அறுவடை செய்த நெல்லை காய வைத்து பின்பு தான் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறோம். அறுவடை செய்யும் போது வயல்கள் ஈரமாக இருப்பதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதில் சவாலாக உள்ளது.

41 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.900க்கு வாங்கிக் கொள்கிறார்கள். வைக்கோல்கள் விற்பனை செய்வதிலும் பிரச்சனை உள்ளது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.40க்கு தான் விற்க முடிகிறது. மேலும் இந்த ஆண்டு மழை அதிக அளவில் பெய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அறுவடை இயந்திர வாடகையை குறைக்க வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்கள் குறைவாக உள்ளது. வேளாண்மைத்துறை சார்பில் அதிக அறுவடை இயந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola